![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi857oxyX5L9vRaxhjRg_mDu8SSCidswn0yajILhrrKR7HW5hxn197QaGvs0LDBt6Rc-DOFQrHDg2HwKKJgR1uPyRYaaxcglRL7S111zbBLlD88wFEra6cHyEENGuXM7Qpuyl6tvx-wW8-D/s200/india_china_ellai_prachanai.jpg)
வெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ்(NCBH)
இந்தப் புத்தகம் 2008-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. தற்போது ஆசிரியருக்கு வயது 88. இந்த வயதிலும் கடுமையாக உழைத்து இந்திய சீன பிரச்சனைகளை ஆராய்ந்து, பிரச்சனைக்கான காரணம் என்ன? அதை தீர்க்க முடியுமா? அது சாத்தியமா? என பல கேள்விகளைக் கொண்டு சிக்கல்களை எடுத்துக்காட்டியுள்ளார். பல உடன் படிக்கைகளை ஆதாரமாக ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
1913 -ல் மக்மகானால் வகுக்கப்பட்ட இந்த எல்லைக் கோடு இன்று வரை தீர்க்க முடியாத பல சிக்கல்களை துளிர்விட்டு வளரச் செய்துள்ளது. இந்த எல்லைப் பிரச்சனை இந்திய-பாகிஸ்தான் மற்றும் இந்திய-சீன நாடுகளுக்கிடையேயான ஓர் அணையாத நெருப்பாக, சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
சிக்கல்கள் தீர்க்கப்படாமல், 1947-ல் சுதந்திர இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்ற நேரு அரசாங்கத்திடம் மக்மகான் வகுத்த எல்லைக்கோட்டுடன் நாட்டை ஒப்படைத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லையை பிரிட்டிஷ் அரசாங்கம் பலமுறை மாற்றியுள்ளனர்.
ஒரு நிலைக்குமேல் நேருவின் அரசு, எல்லைக் கோட்டை நோக்கி முன்னேறிச்சென்று ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி இருக்கிறது. அதை பல முறை சீனா கண்டித்து இருக்கிறது. பல முறை சமரசத்திற்கு அழைத்தும் இந்தியா அந்த வாய்ப்புகளை அலச்சியப்படுத்தி இருக்கிறது.
இந்த கண்டிப்பு ஒருவாறாக முற்றி 1962-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுத்துள்ளது. இந்தப் போரில் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், சீனாவிலுள்ள சில பகுதிகளை இந்தியா தனக்கு சொந்தம் என்று சொல்கிறது. இந்தியாவிலுள்ள அருணாச்சல பிரதேசம் வரையுள்ள சில பகுதிகளை சீனா தனது என்று சொல்கிறது. (இதுமட்டுமில்லாமல் சில வற்றாத ஜீவ நதிகள் சீனாவில் தொடங்கி இந்தியா வழியாக சென்று கடலில் கலப்பதால் இது தண்ணீர் பிரச்சனையாகவும், நதி நீர்ப் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது.) இந்த மோதலுக்கான முக்கிய காரணகர்தாக்களில் C.I.A வின் பங்கு கணிசமானது என்பதையும், அதன் மூலம் அமெரிக்கா அடைந்த லாபத்தையும் சொல்லவே தேவையில்லை.
தேவையற்ற இந்த போரினால் இருநாடுகளுக்கும் ஏற்பட்ட இழப்பும், பரஸ்பர விரோத மனப்பான்மையும் நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்பதை ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேரு அவர்களின் தவறான அணுகு முறையையும் நூலாசிரியர் கடுமையாக சாடியுள்ளார். நாளேடுகளின் தவறான, நடுநிலையற்ற செய்திப் பிரச்சாரத்தையும், போரினைப் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்கு கொண்டு செல்வத்தையும் ஆசிரியர் கடுமையாக சாடி இருக்கிறார்.
முழுவதுமாக இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து ஆதாரங்களுடன் தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். படிக்கவேண்டிய புத்தகம்.
6 comments:
I have not heard about this information before. Continue the good work. Others also can learn
Thanks for your visit Saravanan...Also thanks for yours comments.
நல்ல புத்தகம் பற்றி கூறியதற்க்கு நன்றி
எனக்கு அந்த பிரச்சனை பற்றி அவ்வளவக தெரியாது தேடி படிக்கிறேன்
நன்றி
பின்னூட்டத்திற்கு நன்றி ... உண்மையிலேயே படிக்கவேண்டுய புத்தகம் தான். நேருவின் மாறுபட்ட அரசியல் இந்த புத்தகத்தில் தெரியவரும்.
நீங்கள் படித்த தரமான அரிய புத்தகங்களை சிறு குறிப்புகளுடன் அறிமுகப்படுத்தி வருகின்றீர்கள். அது எமக்கும் பிரயோசனமாக உள்ளது. எழுத்துப் பிழைகள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதை காலப்போக்கில் நீங்களாகவே திருத்திக் கொள்வீர்கள்.
இந்திய-சீன எல்லைப்பிரச்சினை பற்றி இந்திய அரச சார்பற்று ஒரு நூல் வந்திருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். இனிமேல் தமிழ் புத்தகங்கள் வாங்குவதற்கு முன்னர் உங்களது விமர்சனங்களை படித்து விட்டே வாங்க இருக்கிறேன்.
பிழைகளை தவிற்க என்னாலான எல்லா முயற்சிகளையும் கண்டிப்பாக எடுக்கிறேன் நண்பரே. வருகைக்கும் இடுகைக்கும் நன்றி நண்பரே.
Post a Comment