Wednesday, May 6, 2009

En peyar ramaseshan - Aadhavan

என் பெயர் ராமசேஷன்: ஆதவன்
விலை: 120 ரூபாய்
வெளியீடு: உயிர்மைப் பதிப்ககம்

கதாவிலாசத்தில் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்திய மூத்த படைப்பாளிகளில் ஆதவனும் ஒருவர். அப்படியே "என் பெயர் ராமசேஷன்" மற்றும் "காகித மலர்கள்" என்ற ஆசிரியரின் இரு புகழ் பெற்ற நாவல்களையும் அறிமுகப்படுத்தியிருப்பார். அதிலிருந்தே ஆதவனின் படைப்புகளை தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் உயிமைப் பதிப்பகத்தின் வெளியீடாக நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்க நேர்ந்தது.

நாவலின் கருவினை மேலோட்டமாக சொல்லுவதென்றால் பாரம்பரியமான இந்தியக் குடும்பங்களில் மேற்கத்திய கலாச்சாரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியது எனலாம். மேலும் கலாச்சார மாற்றத்தினால் அணியும் முகமூடி ஏற்படுத்தும் உறவின் சிதறல்களை எதிர் நோக்கும் பொய்யான அணுகுமுறைகளைப் பற்றிய நுட்பமான படைப்பு எனலாம்.

ராமசேஷன் கட்டுக்கோப்பான பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பத்தில் புரட்சி ஏற்படுத்தி கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெரியப்பாவையே முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறான். நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவனுடைய அம்மாவின் விருப்பப்படி பொறியியல் கல்லூரியில் சேர்கிறான். அங்கு புதிய நண்பனான ராவுடன் அறையைப்பகிர்ந்து கொள்கிறான். விடுதி வாழ்க்கை அவனுக்கு மேலும் சில நண்பர்களையும், சுதந்திரத்தையும் அளிக்கிறது.

ராவ், மூர்த்தி இருவரும் உடன் படிக்கும் கல்லூரி தோழர்கள். ராவுடனான நெருக்கம் அவனது வீட்டிற்குச் சென்று குடும்ப உறவினர்களை சந்திக்கும் வரை வளர்கிறது. அங்கு இளமையின் வாசல்களில் ஊஞ்சலாடும் ராவின் தங்கை மாலா அறிமுகமாகிறாள். Infatuation, love, Lust இவற்றில் எது என்று தெரியாதவொன்று ராமிற்கு மாலாவின் மீது ஏற்படுகிறது.

ஆவலுடன் சினிமா, பார்க், ஹோட்டல் என பல இடங்களில் தோல் மீது கை போட்டு சுற்றுகிறான். இவர்களின் வாழ்க்கையில் கவனம் செலுத்துபவர்கள் மீது குரோதம் ஏற்படுகிறது.

மாலா மேற்கத்திய
க் கலாச்சாரத்தில் வளர்ந்தவள் என்பதால் அவனுடைய உருப்பெறாத உணர்வுக்கு வடிகாலாக மாறுகிறாள். மாலாவின் அம்மாவிற்கு இவர்களது உறவு பிடிக்கவில்லை. ராவை எச்சரிக்கிறாள். மாலாவிற்கு இது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவளது அம்மாவை மீறி நடக்கவேணும் ராமிடம் நெருங்கிப் பழகுகிறாள். அது அவர்களுடனான உடலுறவு வரை செல்கிறது.

ராமிற்கு இந்த
க் கள்ளத்தனம் நாளடைவில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மாலாவிடமிருந்து விலகிவிடுகிறான். இடையில் ராமசேஷனுக்கு பிரேமாவின் நட்பு கிடைக்கிறது. இங்கும் அவளிடம் முழுமையான காதல் என்று சொல்வதற்கில்லை. இந்த உறவும் நாளடைவில் களைந்து விடுகிறது.

தன்னுடைய மனைவியாக இருக்க தகுதியானவள் பங்கஜம் மாமி தான் என்று முடிவு செய்கிறான். அவளுக்கு இவன் வயதிற்கு ஈடான மகள் உண்டு. கணவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதால் மாமிக்கும் ராமின் மீது ஒரு பற்றுதல். சமூக யதார்த்தம் இருவரையும் பிரிக்கிறது. மாமி ஜாம்செட்பூரிலுள்ள தனது மகனுடைய வீட்டிற்கு நிரந்தரமாகச் சென்றுவிடுகிறாள்.

சரியாக ராமசேஷனின் கல்லூரி வாழ்க்கை முடியும் தருணத்தில் அவனுடைய அப்பா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இது அவனுடைய உறவுகள் மீதான கணிப்புகளை மேலும் எரிச்சலடையச் செய்கிறது. திருமணத்தில் விருப்பமில்லாமல் அவனுடைய அம்மாவின் மீது எரிந்து விழுகிறான்.

ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் சினிமா பார்க்கச் செல்கிறான். அங்கு இவனுடைய தங்கையை ஒரு வாலிபனுடன் பார்க்கிறான். தங்கை வீட்டிற்கு வந்ததும் எப்படியெல்லாம் வசைபாட வேண்டுமென்று சிந்தித்தவாறே அங்கிருந்து நகர்கிறான்.

மேற்கத்திய பாணியிலான போலித்தனங்கள் ராமசேஷனை தோற்கடிக்க நினைத்தாலும் கடைசியில் வரையறுக்கப்பட்ட சம்பிரதாய போலித்தனகளையே வாழ்க்கையின் ஆதாரமாக அவன் எடுத்துக் கொள்கிறான்.

7 comments:

ஆதவா said...

நான் படிக்க விரும்பும் நாவல்.... நிச்சயம் வாங்கிப் படிப்பேன்!!!! விமர்சனம் அழகு!!

Unknown said...

ஆதவன் இது காசினோவா டைப் கதை. உண்மையிலேயே அருமையான எழுத்து. தொடராக வந்த காலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.

தவறாமல் வாங்கி படியுங்கள் ஆதவா.

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

priyamudanprabu said...

பாரம்பரியமான இந்தியக் குடும்பங்களில் மேற்கத்திய கலாச்சாரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியது எனலாம். மேலும் கலாச்சார மாற்றத்தினால் அணியும் முகமூடி ஏற்படுத்தும் உறவின் சிதறல்களை எதிர் நோக்கும் பொய்யான அணுகுமுறைகளைப் பற்றிய நுட்பமான படைப்பு எனலாம்.
////

படித்தேன்
சரியா சொல்லியிருக்கீங்க

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

சென்ற தீபாவளி விடுமுறைக்கு இந்தியா வந்தேன் , அப்போது பல புத்தகங்கள் வாங்கினேன்,உங்கள் பதிவுகளில் இருந்த புத்தகங்கள் சில

மிக்க நன்றி

என் பெயர் ராமசேஷன் வாங்கி வந்து சமிபத்தில்தான் படித்தேன்

அருமையாக இருந்தது

பகிர்ந்த உங்களுக்கு நன்றி

மற்ற புத்தகங்களி படித்து விட்டு சொல்கிறேன்

adhavan8888 said...

சமூகத்தை பற்றிய
எனது எண்ணங்களை
மாற்றியமைத்த
கதைகள் ஆதவனின் சிறுகதைகளும் நாவல்களும்
முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் முகங்களின்பால் இரக்கம் கொள்ள செய்கிறது ஆதவனின் எழுத்துக்கள்