Monday, June 22, 2009

Ashapoorna devi - Short stories

வங்காளச் சிறுகதைகள்: ஆஷாபூர்ணா தேவி விலை: 100-/ ரூபாய்
வெளியீடு: விசா பதிப்பகம்
தமிழில்: புவனா நடராஜன்

வங்காளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி 1909-ம் ஆண்டில் கல்கத்தாவில் பிறந்தார். முறைப்படி பள்ளிக்கு சென்று கற்கவில்லை என்றாலும் தனது சொந்த முயற்சியால் மொழியினைப் பயின்று, சிறந்த புலமையை பெற்று பல அரிய படைப்புகளை வங்காள இலக்கியத்திற்கு அளித்திருக்கிறார்.

இவர் 176 நாவல்களும், 30 சிறுகதைத் தொகுப்புகளும், 47 குழந்தை இலக்கிய நூல்களும், 25 மற்ற படைப்புகளும் படைத்துள்ளார். 'Pratham Pratishruti' என்ற நாவலுக்காக 'ஞானபீட விருது' பெற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாவலை மொழிபெயர்த்த புவனா நடராஜனும் தேர்ந்த படிப்பாளி மற்றும் மொழிபெயர்ப்பாளர். அவரைப் பற்றி படிக்க ஆறாம் திணை இணையதளத்திற்கு செல்லவும்.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாச் சமூகங்களிலும், எல்லாக் காலங்களிலும் பெண்ணின் நிலை ஆண்களை விட சிக்கலானதே. அந்த சிக்கலான வாழ்க்கையில் அவர்கள் அனுசரித்துபோக வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

அதுவும் தாத்தா,பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, கணவன், மனைவி, பணிப் பெண்கள் என பல உறவுகள் இருக்கும் கூட்டுக் குடும்ப முறையில் பெண்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.

அது போன்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், உறவுகள் சிதைந்து உருவாகும் தனிக் குடித்தன வாழ்கையும் தான் இவரின் முக்கிய கருக்கள்.

ஒரு சில கோணங்களில் பார்க்கும் போது படைப்பாளியின் ஆளுமையே இதுபோன்ற சிக்கலான விஷயங்களை இலக்கியமாக்குவதில் தான் இருக்கிறது. அஷாபூர்னாதேவி அந்த வேலையைத் தொய்வில்லாமல் செய்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் வங்காளிய பெண்களின் நுட்பமான உளவியல் பிரச்சனைகளை தனது எழுத்தின் மூலம் கொண்டு வந்து இவர் உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இவருடைய முக்கிய கதாப்பாத்திரம் சில நேரங்களில் மாமியாராக இருக்கும், சில நேரங்களில் மருமகளாக, சில நேரங்களில் வளர்ப்புத் தாயாக, சில நேரங்களில் தோழியாக, சில நேரங்களில் சகோதரியாக, சில நேரங்களில் மகளாக இருக்கும்.

அது போல அக்கா, தங்கை பிரச்சனையைக் கருவாகக் கொண்ட 'கருப்பு சூரியன்' என்ற சிறுகதை புவனா நடராஜனின் மொழிபெயர்ப்பில் ஆறாம்திணை இணைய பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

கருப்பு சூரியன்

400 பக்கங்களுக்கும் குறைவில்லாமல் இருக்கும் இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பது சற்றே சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் வித்யாசமான படைப்பின் ருசியினை உணரலாம்.

5 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

முறைப்படி பள்ளிக்கு சென்று கற்கவில்லை aanaal இவர் 176 நாவல்களும், 30 சிறுகதைத் தொகுப்புகளும், 47 குழந்தை இலக்கிய நூல்களும், 25 மற்ற படைப்புகளும் படைத்துள்ளார். 'Pratham Pratishruti' என்ற நாவலுக்காக 'ஞானபீட விருது' பெற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாச் சமூகங்களிலும், எல்லாக் காலங்களிலும் பெண்ணின் நிலை ஆண்களை விட சிக்கலானதே. //

ஒரு சின்ன திருத்தம்

//எல்லாக் காலங்களிலும் பெண்ணின் நிலை சிக்கலானதே. // :(

400 பக்கங்களுக்கும் குறைவில்லாமல் இருக்கும் இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பது சற்றே சிரமம். கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் வித்யாசமான படைப்பின் ருசியினை உணரலாம் //

உணர முயற்சிக்கிறேன், பகிர்வுக்கு நன்றி.
ரொம்ப ஆழமான படிப்பாளியோ நீங்க.
ஏன்னா உங்க இந்த பதிவின் மூலமாகத்தான் ”வங்காளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி ” அறிகிறேன்.

Unknown said...

ஆழமாக படிப்பேனா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நிறைய மூத்த படைப்பாளிகளின் ஆக்கங்களை வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

தமிழில் நமக்கு கி.ரா இருக்கிறாரே. அவரும் தன்னை பள்ளிக் கூடம் செல்லாதவர் என்று தானே சொல்லிக் கொள்கிறார். பொதுவாக அதுபோல் எழுதுகிறவர்களின் படைப்புகளில் இயல்பான வாழ்க்கை நிரம்பி இருக்கும்.

பொதுவாக வங்காளிகளும், மலையாளிகளும் மொழியின் மீது தீவிர பற்று கொண்டவர்கள். அவர்களிடம் சிறந்த படைப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே அவர்களுடைய படைப்புகள் இருக்கிறதா என்று எங்கு சென்றாலும் தேடுவேன்.

உதாரணமாக பஷீரின் படைப்புகள். நிகறில்லா படைப்புகள். கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது.

ரகசிய சிநேகிதி said...

பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா..

Unknown said...

பின்னோட்டத்திற்கு நன்றி ஸ்நேகிதி...

priyamudanprabu said...

பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா..