Wednesday, January 4, 2012

புத்தகக் கண்காட்சி 2012

புத்தகத்திற்காக அலைந்த காலங்கள் சுவாரஸ்யம் நிறைந்தது. நீண்ட அலைச்சலுக்குப் பின், பல மணிநேர பணம் செய்து, பதிப்பகத்தின் முகவரி கண்டுபிடித்து புத்தகங்கள் வாங்கிய காலம் கூட உண்டு. “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அதற்கெல்லாம் புண்ணியம் கட்டிக் கொண்டார். ஒரு தொலைபேசி உரையாடலில் எல்லாம் முடிந்து விடுகிறது.

இரண்டு வருடங்களாக கண்காட்சியை ஒட்டி ஏராளமான நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்கிறது. வாசித்து வியந்த எழுத்தாளர்களையும், புத்தக வாசிப்பால் உறவாடும் நண்பர்களையும் நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது. மேற்கொள்ளும் நீண்ட பயணங்களும், புதுப்புது விஷயங்களைத் தேடித் திரிந்தாலும் கடந்த ஆண்டில் புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கேணி சந்திப்பு சார்ந்தும் எழுத முடியாத சூழல்.

1. சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு),
2. பாலு சத்யா சிறுகதைகள் (வம்சி, அம்ருதா),
3. அவன்-அது=அவள் – பாலபாரதி (தோழமை),
4. அன்பின் வழி - க நா சு
5. லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள்

-ஆகியவற்றைத் தவிர்த்து வேறெதுவும் படிக்க இயலவில்லை. இந்த புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நகர வாழ்வின் சிக்கல்களுக்கு உள்ளாகும் மனித இருப்பின் ரெண்டுங்கெட்டான் தனத்தை பாலுசத்யா தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். திருநங்கைகள் குறித்த பாலபாரதியின் நாவலும் அதன் தன்மையில் முக்கியம் வாய்ந்ததே. நீலாநதி –எனும் லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் முழுவதும் வாசிக்க இயலவில்லை. படித்த வரை வித்யாசமான வாசிப்பனுபவமாகவே அமைந்தது. இந்தப் புத்தகங்களை அழுத்தமாகவே நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

சமீபத்தில் ஏற்பாடாகியிருந்த “அழகர்சாமி குதிரை” திரைப்பட கலந்துரையாடலுக்காக “கனகதுர்கா – வம்சி செளியீடு” தொகுப்பிலுள்ள சில கதைகளை வாசிக்க நேர்ந்தது. மீள் வாசிப்பிலும் சிறுகதைகள் ஃபிரெஷ்ஷாகவே இருந்தது. இணையத்திலும் முன்போல் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் முகநூலில் நண்பர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையில் நேரம் கழிந்து விடுகிறது.

காலச்சுவடு பதிப்பகத்தில் நல்ல பல புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். ஏற்கனவே சில புத்தகங்களுக்கு முன்பணம் கூட செலுத்தியிருக்கிறேன். சென்ற வருடமே சாகித்ய அகாடமி அரங்கிற்குச் சென்று ஏராளமான மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வாங்கப்பட்டும் பக்கங்கள் புரட்டப்படாமல் இருப்பது நெஞ்சைப் பிசைகிறது.

சென்றவருடப் புத்தகப் பரிந்துரை

இந்த ஆண்டிற்கான விழா இதோ துவங்கிவிட்டது. ஆய்வுக் கட்டுரைகளையும், திறனாய்வுக் கட்டுரைகளையும், தத்துவ விசாரணை புத்தகங்களையும் பட்டியலில் வைத்திருக்கிறேன். நண்பர்கள், சிலருடைய படைப்புகளை கூகிள் பஸ்சில் குறிப்பிட்டிருந்தார்கள். கூகுள் நிறுவனம் பஸ்சை நிருத்திவிட்டமையால் நண்பர்கள் இங்கு மீண்டும் பரிந்துரை செய்யவும்.

உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

(முற்றும்)

மேலும் சென்னை புத்தகக் காட்சியில் தினசரி படைப்பாளியுடன் நேருக்கு நேர் நிகழ்த்சி “க.நா.சு” நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற இருக்கிறது. தினமும் மாலை F-35 அரங்கில் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம். பின்வரும் அட்டவணையில் முக்கியமான படைப்பாளிகள் விழாவில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.

வெ 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி

சனி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்

ஞா 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி - எஸ்.ராமகிருஷ்ணன்

தி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்

செ 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்

பு 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்

வி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்

வெ 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்

சனி14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்

ஞா 15- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்

தி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா

செ17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்

8 comments:

Umesh said...

enaku book fair-il kidaitha arumayana nanbar neengal ! avvagayil indha book fair-ku naan endrum nandri soluven !

ஜோதிஜி said...

நாஞ்சில் நாடன் வரமாட்டாரோ?

Unknown said...

I am also fortunate to be in touch with you my dear umesh.

Unknown said...

@ ஜோதிஜி – யாமறியேன் பராபரமே!... வருடா வருடம் தமிழினியில் அவரைப் பார்ப்பதுண்டு. இம்முறையும் வருவார் என்றே நினைக்கிறேன்.

:-)

அ.மு.செய்யது$ said...

// ஜோதிஜி திருப்பூர் said...
நாஞ்சில் நாடன் வரமாட்டாரோ?

//


நாஞ்சில் நாடன் தமிழினியில் காணக்கிடைப்பார்.

பாரதி மணி said...

நாஞ்சில் நாடனை நேற்று சாரல் விருதில் சந்தித்தேன். இன்று புத்தகக்காட்சிக்கு வருகிறார்.

பாலு சத்யா said...

அன்புள்ள கிருஷ்ணபிரபு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து என் சிறுகதைகளைப் பற்றி உங்கள் பதிவில் குறிப்பிட்டு வருகிறீர்கள். பாராட்டவும் ஒரு மனசு வேண்டும். நன்றி.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை நண்பரே!