Thursday, January 22, 2009

Siluvai raj sarithiram, Kaalachumai and landanil irunthu siluvai raj

ஐந்து வருடங்களுக்கு முன்பு தண்டபாணி அண்ணா summer leave -ற்கு Delhi -ல் இருந்து Ponneri வந்திருந்தார்கள். கூடவே Delhi book fair -ல் இருந்து சிலுவைராஜ் சரித்திரம் மற்றும் காலச்சுமை என்ற இரு நாவல்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். கூடவே கி.ரா-வின் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்.

இரண்டு நாவல்களையுமே முனைவர் ராஜ் கௌதமன் எழுதி இருந்தார். அதற்கு முன் இவருடைய புத்தகங்களை நான் படித்ததில்லை. கீழுள்ள மூன்று நாவல்களுமே அவருடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதைத் தவிர தலித் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என தனது பன்முகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
வெளியீடு:
தமிழினி (Rs: 260)

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில், Indian Army - ல் வேலைபார்க்கும் ஒருவருக்கு மூத்த மகனாக, கிறித்துவ தலித் சமுதாயத்தில் சிலுவை ராஜ் பிறக்கிறான். இங்கிருந்து தான் நாவல் ஆரம்பமாகிறது.

40 வருடங்களுக்கு முன்பு வரையிருந்த கிராம ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையினூடே நாவலானது பயணிக்கிறது.

சிலுவை ராஜின் வழியாக கிராம ஆரம்பப் பள்ளி வாழ்க்கையையும், school hostel and college hostel வாழ்க்கையையும் ராஜ் கௌதமன் படம் பிடித்துக் காட்டுகிறார்.

நாவலின் ஆரம்பத்திலும் சரி, கல்லூரி முடித்து வேலை இல்லாமல் இருக்கும்போதும் சரி வாழ்க்கையை அதன் இயல்போடு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். UG -ல் BSC Chemistry படித்துவிட்டு, சந்தர்ப்பம் காரணமாக MA Tamil படிக்க வேண்டிய சூழ்நிலை சிலுவை ராஜிற்கு ஏற்படுகிறது.

வேதியலும், தமிழும் படித்திருந்தாலும் சிலுவை ராஜ் தமிழ் சார்ந்த துறையில் செல்லவே விரும்பியதால், விளம்பரத்தை
ப் பார்த்து Govt college lecturer post -க்கு விண்ணப்பம் செய்கிறான். விண்ணப்பித்த வேலையானது இந்து தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு ஆகையால் இவன் நிராகரிக்கம்படுகிறான்.

கிறித்துவனாக இருப்பதால் தானே வேலை கிடைக்கவில்லை எனவே இந்துவாக மதம் மாறிவிடலாமென்று ஆதீனத்திடம் சென்று தனது
பெயரை மாற்றிக்கொண்டு இந்துவின் பெயரில் சாண்றிதழ் வாங்கிக்கொள்வதோடு இந்த நாவல் முடிகிறது.

தன் பெயரை மாற்றிக்கொண்டு , வேலையிலும் சேர்ந்து சிலுவை ராஜ் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அடுத்த நாவலில் காலச்சுமையாக விரிகிறது.

காலச்சுமை - ராஜ் கௌதமன்
வெளியீடு:
தமிழினி (Rs. 160)

இந்த நாவலானது சிலுவை ராஜ் சரித்திரத்தின் தொடர்ச்சி. இந்துவாக மாறி Govt college lecturer வேலையில் பல கனவுகளுடன் சேர்ந்து, அங்கு தான் சந்திக்கும் அனுபவங்களினூடே நாவல் செல்கிறது.

என்னதான் தன் பெயரை மாற்றிக்கொண்டாலும் இடையிடையே சிலுவை ராஜின் நினைவுகளும் வந்து செல்லும் இடங்களில் நகைச்சுவை வெளிப்படுகிறது. மேலும் ஒரு லட்சியத்தோடு ஆரம்பத்தில் வேலைக்குச் சேர்ந்தவன், பிறகு எப்படி தன் பாதையை வகுத்துக்கொள்கிறான் என்பதாக கதை பயணிக்கிறது.

கிராமங்கள் நகரங்களாக மாறிவரும் இன்றைய சூழலில் இந்நாவல் நம்மை அழகானதொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

கரடு முரடான அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பகிர்வுகளையும், நிகழ்வுகளையும் தனது தேர்ந்த எழுத்தின் மூலம் அழகு சேர உணரவைக்கிறார்.

லண்டனிலிருந்து சிலுவைராஜ் - ராஜ் கௌதமன்
வெளியீடு:
தமிழினி (Rs:90)

நான் வேலை செய்யும் இடம் Egmore -ரில் இருப்பதால் மதியம் lunch முடித்து Chennai Kannimara Library -க்கு பக்கத்திலுள்ள Permanent Book Exhibition
-க்கு வாரத்தில் இரண்டு முறை செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் போது லண்டனிலிருந்து சிலுவை ராஜ் புத்தகம் வாங்கினேன்.

சிலுவை ராஜ் நமக்கு கிராமத்து பையனாக,
college lecturer -ஆக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு ஐரோப்பிய பயணியாக இந்த புத்தகத்தின் மூலம் தனது மகளின் லண்டன் வீட்டிற்கு பயணம் செய்கிறான்.

தனது மானைவியுடனான இந்த பயணத்தில் அவன் பார்க்கும் சிறப்புமிக்க இடங்களையும், பயணத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களையும், உடன் பயணம் செய்யும் நண்பர்களின் அணுகுமுறையையும் நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறான். இங்கிருந்து அயல்நாடு சென்று வேலைபார்ப்பவர்களின் பெற்றோராக சந்திக்கும் சிரமங்களை நகைச்சுவை இழையோட பகிர்ந்துகொள்கிறான்.


Lecturer & Writer Raj gowthaman தனது வாழ்பனுபவங்களை இந்த நாவல்களின் மூலம் பகிர்ந்து கொண்டாலும், படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வரையில் கொண்டு செல்கிறார்.

2 comments:

Unknown said...

Dear sir,
for the job, life changned your religion. Is it right?
Jesus is the saviour for eternal life not a worldly life


PP Dayanithi

Unknown said...

என்னைக் கிருஷ்ணா என்றே அழைக்கலாம். சார் எதற்கு... மேலும் எந்த மதத்தின் மீதும் எனக்கு அதீத பிடிப்பு இல்லை.

:-)