Tuesday, January 17, 2012

புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை

புத்தகக் கண்காட்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நண்பர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். "என்ன புத்தகம் வாங்கலாம்?", "புதுவரவில் எந்தெந்த புத்தகங்கள் சிறந்தது?" போன்ற பல கேள்விகள். கடந்த ஆறுமாத காலமாக ஓயாத பயணம், அலைச்சல், தொழின்முறை சந்திப்புகள் என்றே கழிந்துவிட்டது. விட்டில் பூச்சி வெளிச்சத்தை நேசிப்பதைப் போலத்தானே சிலபல முயற்சிகளையும் வாழ்க்கையில் துணிந்து எடுக்கவேண்டி இருக்கிறது. அணு உலையால் வம்சமே பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. என்றாலும் துணிந்து அந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கிறோம். மக்களை மயக்கும் சமாதானங்களையும் கூச்ச நாச்சம் இல்லாமல் முன்வைக்கிறோம். தெரியாத விஷயத்தில் சுய விருப்பம் சார்ந்து நாம் எடுக்கும் முடிவுகளும் அப்படிப்பட்டதே. பரிட்சார்த்த முயற்சிகளும் அணு உலையைப் போன்றதே. கரணம் தப்பினால் வம்சத்தின் மரணம் கண்முன்னே நிகழ்ந்துவிடும். இங்கு "வம்சம்" என்பது என்னை நேசிக்கும், என்மேல் நம்பிக்கை வைக்கும் நண்பர்களாக இருப்பதுதான் வேடிக்கை.

"என்ன வேலை செய்யிருங்க கிருஷ்ணா?" என்று சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் பத்மஜா கேட்டிருந்தார்.

"சும்மாதாங்கா இருக்கேன். ஆனால் வேலை செய்தபோது உழைத்ததை விட, வெறுமனே இருக்கும்போது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது" என்று அக்காவிடம் பகிர்ந்து கொண்டேன்.

"உண்மைதான் கிருஷ்ணா. முடிந்த வரை கூடுமான அனுபவங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற வாய்ப்பு எல்லா நேரங்களிலும் கிடைக்காது. உங்களுக்கான அபூர்வ தருணங்கள் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். கவித்துவமாக...

அக்கா சொல்லியது போலவே அபூர்வ தருணங்கள் தாமாகவே அமைகிறது. "அனுபங்கள்" சக மனிதர்களைப் போல வீட்டு வாசலின் முன்வந்து நிற்கிறது. அவற்றை குசலம் விசாரித்து அனுப்பிவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் ஆண்டின் சரிபாதி ஓடிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களே பக்கங்கள் புரட்டப்படாமல் இருக்க, இந்த ஆண்டும் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. புனைவில் எதையுமே வாங்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடனே புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். சுயவிதிகள் பல்லிலிப்பதுதானே வாழ்வின் நுட்பமான நிதர்சனம். இந்த ஆண்டும் காலச்சுவடு புத்தகங்களையே அதிகம் வாங்க நேர்ந்தது. முக்கியமான சில புத்தகங்களை இந்த ஆண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். விலைதான் சற்று கூடுதல். மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், சத்தம் கேட்கும் நேரத்தை எதிர்பார்த்து, விரைந்து ஓட வேண்டும் என்ற முழுப் பிரக்ஞையுடன். இந்த ஆண்டும் திட்டமிட்ட காரியங்கள் நிறையவே இருக்கிறது. வாசிப்பதற்கான நேரம் நிச்சயமாகக் கிடைக்காது என்று தெரிந்தே சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றின் பட்டியல் இதோ...

காலச்சுவடு பதிப்பகம்
1. ஆனைவாரியும் பொன்குருசும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
2. உண்மையும் பொய்யும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
3. சங்கராபரணி - மாலதி மைத்ரி
4. நீலி - மாலதி மைத்ரி
5. உண்மை சார்ந்த உரையாடல் - காலச்சுவடு நேர்முகம்
6. மனக்குகை ஓவியங்கள் - சுந்தர ராமசாமி
7. வன்முறை வாழ்க்கை - கண்ணன்
8. திரும்பிச் சென்ற தருணம் - பி ஏ கிருஷ்ணன்
9. பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் - ஓ. ரா. ந. கிருஷ்ணன்
10. நவீன நோக்கில் வள்ளலார் - ப சரவணன்
11. நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய் - க. பூரணச்சந்திரன்
12. சென்னைக்கு வந்தேன் - பழ. அதியமான்
13. கனவின் யதார்த்தப் புத்தகம் - அரவிந்தன்
14. திரைவழிப் பயணம் - உமா ஷக்தி
15. கச்சத்தீவும் இந்திய மீனவரும் - வி சூரிய நாராயணன், கே. முரளிதரன்
16. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - ஜெயந்தி ஷங்கர்
17. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து - அரவிந்தன்
18. உமாவரதராஜன் கதைகள் - உமா வரதராஜன்
19. தமிழ் இதழ்கள் - ரா. அ. பத்மநாபன்
20. சோஃபியின் உலகம் - யோஸ்டைன் கார்டெர் (ஆர். சிவக்குமார்)

க்ரியா பதிப்பகம்
21. மேற்கத்திக் கொம்பு மாடுகள் - ந முத்துசாமி
22. தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் - பியர் பூர்தியு

பாரதி புத்தகாலயம்
23. உணவு நெருக்கடி - ஏ. பாக்கியம்
24. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - ச தமிழ்ச்செல்வன்
25. அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச தமிழ்ச்செல்வன்
26. நந்தி கிராம் – அருணன்
27. இன்னொரு சென்னை - க மாதவ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
28. நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் - பம்மல் சமந்த முதலியார்
29. இலக்கிய இதழ்கள் - இ. சுந்தரமூர்த்தி, மா. ரா. அரசு
30. நாவல் கலையியல் - முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்
31. தமிழ் நாடகம் - நேற்றும் இன்றும் - முனைவர் கு. பகவதி

சாகித்ய அகாடமி பதிப்பகம்
32. மௌனத்தின் குரல் - வாஸந்தி
33. பருவம் - எஸ் எல் பைரப்பா – பாவண்ணன்
34. கயிறு - தகழி சிவசங்கர பிள்ளை - சி ஏ பாலன்

காவ்யா பதிப்பகம்
35. ந.முத்துசாமி கட்டுரைகள் - சி. அண்ணாமலை
36. நாடகம் - பதிவும் பார்வையும் - சி. அண்ணாமலை
37. தீராநதி - இலக்கிய இதழ் ஆய்வு - உ சஞ்சை
38. பழமொழிக் கதைகள் - முனைவர் சு. சண்முகசுந்தரம்

தமிழினி பதிப்பகம்
39. வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் - முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ்
40. பகல் கனவு - எம் எஸ் கல்யாணசுந்தரம்
41. அம்மாவின் அத்தை - கி அ சச்சிதானந்தம்
42. தேவதேவன் கதைகள் - தேவதேவன்
43. மீனுக்குள் கடல் - பாதசாரி
44. புனைவும் வாசிப்பும் - எம் வேதசகாய குமார்
45. அ. முத்துலிங்கம் கதைகள் - முழுத்தொகுப்பு

NCBH

46. சிற்பங்களைச் சிதைக்கலாமா? - வெ. இறையன்பு
47. சங்க இலக்கியத்தில் வேளாண சமுதாயம் - பெ. மாதையன்
48. நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - இரவீந்திரபாரதி

சாளரம் பதிப்பகம்
49. அசோகர் கல்வெட்டுகள் - தினேஷ் சந்திர சர்க்கார்
50. கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

உயிர்மை பதிப்பகம்
51. காளி நாடகம் - உன்னி. ஆர் (சுகுமாரன்)
52. அன்புள்ள கி.ரா.வுக்கு - தொகுப்பு: கி. ராஜநாராயணன்
53. கூடங்குளம் - விழித்தெழும் உண்மைகள் - ஆர் முத்துக்குமார்
54. அன்று பூட்டிய வண்டி - ந முத்துசாமி
55. துயில் – எஸ்ரா
56. நெடுங்குருதி - எஸ்ரா

பொன்னி பதிப்பகம்
57. அம்பாரம் - சிறுகதைகள் - பூமணி
58. காக்கைச் சிறகினிலே - இலக்கிய மாத இதழ்
59. ஜென் கதைகள் - சேஷையா ரவி (அகல்)
60. மஞ்சள் வெயில் யூமா வாசுகி (அகல்)

சந்தியா பதிப்பகம்
61. மரங்கள் (நினைவிலும் புனைவிலும்) - மதுமிதா(சுபா ஆண்டி கொடுத்தது)
62. ராமாவும் உமாவும் - திலீப்குமார்

உயிர் எழுத்து பதிப்பகம்
63. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
64. மரங்கொத்திச் சிரிப்பு - ச. முத்துவேல்

65. மனுஷி - பாமா (விடியல்)
66. தாயார் சன்னதி - சுகா (சொல்வனம்)
67. தபால்காரன் - க.நா.சு (பானு பதிப்பகம்)
68. சென்னையும் நானும்... (நம்ம சென்னை)
69. ஏன் இந்த உலை வெறி - ஞாநி (ஞானபானு)
70. சூர்ப்பனகை - கே.வி.ஷைலஜா (வம்சி பதிப்பகம்)
71. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி (கவிதா)
72. ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
73. ஏழு தலைமுறைகள் - அலக்ஸ் ஹேலி (சவுத் விஷன்)
74. சாமியாட்டம் - யெஸ். பாலபாரதி (அன்னை ராஜேஸ்வரி)
75. அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில்: எம் எஸ் (பாதரசம்)
76. ஒரு ஏழை ஏறி வந்த ஏணி - முக்தா சீனிவாசன் (திருக்குடந்தை)
77. சிக்மண்ட் ஃபிராய்ட் - தி.கு. இரவிச்சந்திரன் (அலைகள் பதிப்பகம்)
78. நாடகப் பனுவல் வாசிப்பு - தொகுப்பு: வீ. அரசு, கோ. பழனி (மாற்று)
79. பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழு (HRPC - TN)
80. ஞாலம் போற்றும் பாலம் ஐயா - வழக்கறிஞர் சீ. ஜெயராமன் (ஜெயகீதா)
81. பிரமிள் படைப்புகள் - தொகுப்பாசிரியர்: கால. சுப்பிரமணியம் (அடையாளம்)

ஆவணப் படங்கள்

1. பாலம் கலியாணசுந்தரம்
2. அம்மாப்பேட்டை கணேசன் ஆவணப்பதிவு
3. தீக்கொழுந்து (தேயிலை விவசாயிகள்)
4. பச்சை ரத்தம் (புலப்பெயர்வு பற்றிய கள ஆய்வு)
5. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு
6. முல்லைப் பெரியாறு ஆணை உண்மைகள்
7. இன்றும் வாழும் சோழ மன்னர்கள் கள ஆய்வு
8. மூழ்கும் நதி

22 comments:

சேலம் தேவா said...

நீங்கள் வாங்கியிருக்கும் புத்தகங்களை வைத்தே ஒரு சிறிய கண்காட்சி வைக்கலாம் போலிருக்கிறதே.. :) உண்மையான வாசகர் நீங்கள்தான்...

Umesh said...

nice list of books

Do post reviews whenever u find time na

ச.முத்துவேல் said...

உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
தெய்வம்யா நீர்!!
:)

Unknown said...

@ சேலம் தேவா

வாங்குவதில் பிரச்சனை இல்லை. அதை வாசிக்க வேண்டுமே. அதுதானே பிரச்சனை தேவா.

Unknown said...

@ உமேஷ்

வாசிக்க நேரம் கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன்.

Unknown said...

@ ச முத்துவேல்

/-- தெய்வம்யா நீர்!! --/

சொல்லாமல் கொள்ளாமல் புத்தகம் வெளியிட்டுவிட்டீர்கள் அல்லவா!?

உம்மை நின்று கொல்கிறேனா இல்லையா என்று பாரும் கவிஞரே!

:-D

என்னை வேறு தெய்வம் என்று சொல்லிவிட்டீர்...

:-)))

பத்மா said...

krishna superb keep it up

Unknown said...

@ பத்மா

நன்றிங்க அக்கா...

Sundar said...

நான் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கியதயே இன்னும் படிக்காததால் இந்த முறை போகவேயில்லை

Sundar said...

நான் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கியதயே இன்னும் படிக்காததால் இந்த முறை போகவேயில்லை

"உழவன்" "Uzhavan" said...

இவ்வளவு புத்தகமா!!! படிங்க படிங்க படிச்சிக்கிட்டே இருங்க

☼ வெயிலான் said...

கிருஷ்ணா,

திரும்பவும் சொல்றேன். பொறாமையா இருக்கு. :)

விழியன் said...

செம சேகரிப்பு. அவசியம் எல்லாவற்றையும் வாசித்துவிட்டு பகிரவும்.

//கூடங்குளம் - விழித்தெழும் உண்மைகள் -//
ஆசிரியர் முத்துகிருஷ்ணன்.

குகன் said...

சரியாக திட்டமிட்டால், மேல் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் ஒரு வருடத்தில் வாசித்து விட முடியும்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் இந்த புத்தகங்களை எல்லாம் படித்து முடிக்க என் வாழ்த்துக்கள்.

Unknown said...

@ Vizhiyan

Yes, U R right Vizhiyan. Sorry for the mistake.

Unknown said...

@ Guhan

I hope to do so...

Unknown said...

:) Adengappa! You are awesome!

All the best for reading as many as possible. Take your time. Don't try to digest all of them in one year. The best thing about books is that they have no expiry date.

And if you are in the mood for reading short stories online, please do visit my library at www.openreadingroom.com

Unknown said...

@ Unknown Friend...

Thanks for visit and link suggestion...

keep in touch.

krishna Prabhu

pvr said...

இன்றுதான் உங்கள் வலைப்பக்கத்தைப் பார்த்தேன். அருமை. அடிக்கடி வருவேன். நன்றியும், வாழ்த்துகளும்.

PVR

pvramaswamy@gmail.com
http://idhu-pudhisu.blogspot.in/

Unknown said...

Thanks PVR. Keep in touch

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html

Unknown said...

இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன் http://results89.tumblr.com/