Monday, January 26, 2009

Alagilaa Vilayaattu by Pa Ragavan

சிறு வயதில் பொட்டிக் கடையில் திருடி, நண்பர்களுடன் மாட்டிக்கொண்டு ஊராரிடம் அவமானப்பட்டதில் இருந்து திருட்டு பழக்கத்திற்கே Good Bye சொல்லி இருந்தேன். அது 2004 -ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.

பொன்னேரி Branch library -ல் இலக்கிய பீடம் மாத இதழ் வாசித்துக் கொண்டு இருந்தேன். பா. ராகவன் எனக்கு அப்பொழுது பரிச்சயம் இல்லாத எழுத்தாளர். அவர் எழுதி முதற்பரிசு பெற்ற அலகிலா விளையாட்டின் நான்காவது அத்தியாயம் படித்துக்கொண்டு இருந்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனவே Librarian -னிடம் கேட்டு அதற்கு முந்தைய 3 பிரதிகளையும் வாங்கி இதழிலிருந்து 4 அத்தியாயங்களையும் கிழித்து எடுத்துக் கொண்டேன்.

மாதத்தின் முதல் வாரத்தில் இலக்கிய பீடம் Ponneri library -க்கு வரும். வந்த உடனே முதல் ஆளாக சென்று எனக்கு தேவையான பக்கங்களைக் கிழித்து எடுத்துக் கொள்வேன். தொடர்ந்து ஒரு வருடங்களுக்கும் மேல் வந்த அத்தியாயங்கள் அனைத்தையும் கிழித்து எடுத்து, Binding செய்து இன்றுவரை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். இது எதுவுமே Librarian -க்கு இன்று வரை தெரியாது.

புத்தகமாக கிடைத்தால் Library-க்கு வாங்கி கொடுத்து விடலாம் என்றால் Egmore Permanent Book Exhibition -யும் சேர்த்து எங்குமே கிடைக்கவில்லை.

தமிழோவியம்.டாட்.காம் மூலம் மின்னூல் பெற இங்கு சுட்டவும்.

அலகிலா விளையாட்டு - பா. ராகவன்

எல்லாவற்றையும் துறந்து என்பதை விட, எல்லாவற்றையும் வெறுத்து இமய மலைக்கு சென்ற ஒரு மனிதனின் கடந்த காலத்தை அவனே அசை போடுவதாக கதை செல்லும்.

குடும்ப வருமையால் வேதபாட சாலையில் படித்த ஒருவன், படித்து முடித்து நீண்ட நாள் கழித்து Post Master வேலைக்கு அதே ஊருக்கு செல்கிறான். முதல் வேலையாக தான் படித்த பாட சாலைக்கு சென்று குருவை பார்க்கிறான்.

வேதத்தில் குரு சொல்லிக்கொடுத்த அனைத்தும் உண்மைதான். அப்படியெனில் வேதத்தையே மூச்சாகவும், அதுவே தன்னைக் காப்பாற்றும் என்று சொல்லிய குருவின் வார்த்தை மட்டும் ஏன் பலிக்கவில்லை...அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சங்கடங்கள்... என வேத தத்துவங்கள் மீது பல கேள்விகளை எழுப்புகிறான்.

இடையில் குருவின் கடைசி மகள் மீது காதல் கொள்கிறான். தன் தந்தையின் கஷ்டங்களைப் பார்த்த அவள் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என அவனை நிராகரித்து விடுகிறாள். அவன் விரக்தியுடனும் வேதனையுடனும் Job Transfer -ல் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்றுவிடுகிறான்.

நீண்ட நாள் கழித்து அவளுடைய கல்யாணப் பத்திரிகை இவனுக்கு வருகிறது. தலையில் இடி இறங்கியதாக உணர்ந்த இவன் Post Master வேலையை உதறி விட்டு வேத ஆசிரியராக சென்றுவிடுகிறான். சில வருடங்களில் அதுவும் பிடிக்காமல் வட நாட்டிற்கு சென்று விடுகிறான்.

தன்னுடைய வாழ்க்கையின் கடைசி காலத்தில், தனது குருவின் மகளை, தன் காதலியை விதவைக் கோலத்தில் பார்க்கிறான்.

ஏதோ ஞாபகத்தில் கால் தவறி கீழே விழவும் மரணப் படுக்கையில் படுக்கிறான். மயங்கிய நிலையிலும் அவனுடைய உளவியல் சார்ந்த கேள்விகள் ஓயவில்லை.

இந்தக் கதையை படிக்கும் போது கதாப்பாத்திரமே அருகில் இருந்து நமக்கு கதை சொல்வதுபோல் உணர முடியும். குருவின் கஷ்டங்களைப் பார்க்கும் மாணவனின் உளவியலை அழகாக பா. ராகவன் இந்த கதையில் சொல்லி இருப்பார்.

எழுத்தாளர் பா. ராகவனின் படைப்புகளைக் காண இங்கு செல்லவும்:
www.writerpara.net

2 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

விமர்சனம் படிச்சிட்டேன், புத்தக்ம் வாங்கி சீக்கிரம் படிச்சிடுவேன் :)

Unknown said...

மிகவும் குறைவான புத்தகங்களே இருக்கிறது. கூடுமான வரையில் சீக்கிரம் வாங்கி விடுங்கள்.