Friday, December 31, 2010

சென்னை புத்தகக் கண்காட்சி - 2011

ஓரூரில் ஓர் அரசன் இருந்தானாம். அவனுக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியதாம். அரசர்களிலேயே அறிவாளி என்று பெயர் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தானாம். தனது ஆசையை அமைச்சரவை கூட்டி அதனைத் தெரியப்படுத்தினானாம்.

புத்திசாலி அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து, கூடிப்பேசி அரசனிடம் சென்றார்கள். "அரசே, நமது நூலகத்தில் உலக காவியங்களும், தர்க்க ரீதியிலான தத்துவ நூல்களும் சொல்லிக் கொள்ளும்படி சேமிப்பில் இல்லை. மேலும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் அயல் நாட்டவர் தானே சிறந்து விளங்குகிறார்கள். எல்லாவற்றையும் சேகரிக்க தனிக் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு பல ஆண்டுகள் ஆகும்" என்று கூறினார்கள்.

"அதனால் என்ன? நூல்களை சேகரிக்க உடனே ஆட்களை அனுப்புங்கள். தாமதம் வேண்டாம். காரியம் முடிந்ததும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்தப்புறத்திற்கு விரைந்தானாம் அரசன்.

நாட்கள் உருண்டோடின. பொசுக்கும் கோடை, கொட்டும் மழை, வாட்டும் குளிர், துளிர்க்கும் வசந்தம் என காலம் ஓடியது... பருவ சுழற்சியை பலமுறை கண்டது நாடு. புத்தகம் சேகரிக்க சென்றிருந்தவர்கள் நாடு திரும்பினார்கள். இந்த சேதி அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. நழுவும் ஆடையை சரிசெய்தபடி அந்தப்புறத்திலிருந்து ஓடோடி வந்த அரசன் குவியலைப் பார்த்து மலைத்து நின்றானாம்.

"இதென்ன சோதனை மங்குனி அமைச்சர்களே! இமாலயக் குவியலாக இருக்கிறதே? இவையனைத்தையும் படிக்க ஓர் ஆயுள் போதாதே!. அறிவார்த்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆவல் இருந்ததே தவிர அதற்காக உழைக்கவில்லை. என்னுடைய இளமையெல்லாம் சிற்றின்பத்தில் கழிந்துவிட்டதே. இயற்கை என்னை அழைக்க வரும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லையே!" என்று வருந்தினானாம்.

மன்னர் மன்னா! நீங்கள் பால்யத்தில் தொடங்கி இருப்பினும், உங்களுடைய எண்ணம் இதுவாகவே இருக்கும். ஏனெனில் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது ஆன்றோர்கள் வாக்கு.

"நீர் சொல்வதும் உண்மைதான் அமைச்சரே!" என்று ஆற்றாமையை பகிர்ந்துகொள்ள அந்தப்புறத்திற்கு விரைந்தானாம் அரசன்.

ஆங்கில வருடம் துவங்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மங்குனி அரசனின் ஞாபகம் தான் வரும். ஏனெனில் புத்தகக் கண்காட்சியும் ஆண்டின் தொடக்கத்தில் தானே வருகிறது. நூற்றுக் கணக்கான பதிப்பகங்களின், ஆயிரக் கணக்கான புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் மலைப்பையே ஏற்படுத்துகின்றன.

சிற்றின்பங்களும் சோம்பேறித் தனமும் அதிகமானதால் இதுவரை வாங்கிய புத்தகங்களைக் கூட பக்கங்கள் புரட்டப்படாமலே வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் 34வது சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் சில புத்தகங்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறேன். அவற்றின் பட்டியல்...

1. கடவு - திலிப் குமார் (க்ரியா)
2. ராமகிருஷ்ண பரமஹம்சர் முழுக்கதைகள்
3. வள்ளலார் வாழ்க்கை மற்றும் கதைகள்
4. காலச்சுமை - ராஜ்கௌதமன் (தமிழினி)
5. குளச்சல் மு யூசுப் - மொழிபெயர்ப்பு - காலச்சுவடு
6. காஷ்மீர் - பா ராகவன் (கிழக்கு)
7. கிளாசிக் வரிசை - புதிய வெளியீடு (காலச்சுவடு)
8. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - பத்ரி (கிழக்கு)
9. திருக்குறள் - மு.வ உரையுடன்
10. எஸ்.சங்கர்நாராயன் கதைகள் - இருவாச்சி பதிப்பகம்
11. ஜெயமோகன் புத்தகங்கள்
12. சாமியாட்டம் - எஸ் பாலபாரதி
12. விமலாதித்த மாமல்லன் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

கவிதைகள்: உயிர்மை பதிப்பகம்
1. தீக்கடல் - நரசிம்
2. வெயில் தின்ற மழை - நிலாரசிகன்
3. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - அகநாழிகை பொன்.வாசு

பரிந்துரைக்கும் புத்தகங்கள் - வரலாறு:

1. இந்திய சீன எல்லை தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
2. காஷ்மீர்: சந்திரன்
3. டிராகன் - புதிய வல்லரசு சீனா

நாட்டு நடப்பு:

1. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - அல்லயன்ஸ் பதிப்பகம்
2. ராஜீவ் காந்தி கொலை வழக்கு - கிழக்கு பதிப்பகம்
3. கிரிமினல்கள் ஜாக்கிரதை - கிழக்கு பதிப்பகம்
4. மாலன் கட்டுரைகள் - கிழக்கு பதிப்பகம்

கதை மற்றும் நாவல்கள்:

1. பஷீர் படைப்புகள் - காலச்சுவடு பதிப்பகம்
2. தோழர் - பாரதி புத்தகாலயம்
3. வெட்டுப்புலி - உயிர்மை பதிப்பகம்
4. மௌனத்தின் குரல் - சாகித்ய அகாடமி பதிப்பகம்
5. ஒற்றன் - காலச்சுவடு பதிப்பகம்
6. தரையில் இறங்கும் விமானங்கள் - தாகம் பதிப்பகம்
7. அலகிலா விளையாட்டு - பா ராகவன்
9. ராஜ் கௌதமன் படைப்புகள் - தமிழினி பதிப்பகம்
10. கிளாசிக் வரிசை - காலச்சுவடு பதிப்பகம்
11. அ முத்துலிங்கம் முழுத்தொகுப்பு - தமிழினி பதிப்பகம்
12. காளி நாடகம் - உயிர்மை பதிப்பகம்
13. கனக துர்கா - வம்சி பதிப்பகம்

கட்டுரைகள்:

1. அங்கே இப்போ என்ன நேரம்? - தமிழினி பதிப்பகம்
2. துணையெழுத்து - விகடன் பிரசுரம்
3. பல நேரங்களில் பல மனிதர்கள் - உயிர்மை பதிப்பகம்
4. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - காலச்சுவடு பதிப்பகம்

கவிதைகள்:

1. பரத்தை கூற்று - அகநாழிகை பதிப்பகம்
2. மயிரு - அகநாழிகை பதிப்பகம்

இவையனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கும் புத்தகங்கள். வாங்கும் பொழுது ஒரு சில பக்கங்களை படித்துவிட்டு வாங்கிக் கொள்ளவும்.

நன்றி...

12 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

பரிந்துரைத்த புத்தகங்கள்ல கவிதைகள் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம் கிருஷ்ணா.. அருமையான பரிந்துரைகள்.. நன்றி..:-))

சங்கர் said...

ஒற்றன் க்ளாசிக் பதிப்பு ரூ.150, ஆனால் முந்தைய பதிப்பு ரூ.100, டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கிறது

ராகின் said...

அருமையான வலைப்பதிவு..

பரிந்துரைகளுக்கு நன்றி!!

/ˈjib(ə)riSH/ said...

நண்பரே,

முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையான அறிமுகங்கள். எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்தப் பின்னூட்டம்.

இனிமேல் தொடர்ந்து வருகிறேன்.

Unknown said...

இப்பதானே கவிதை பக்கம் வந்திருக்கேன்... இனிமேல் கொடுக்கலாம் கா பா.

Unknown said...

தகவலுக்கு நன்றி ஷங்கர்...

Unknown said...

நன்றி ராகின்...

Unknown said...

நன்றி மூகன்... தொடர்பில் இருப்போம்...

WordsBeyondBorders said...

இந்த வருடம் மாமல்லன் மற்றும் திலீப் குமாரின் மறுவரவு மகிழ்ச்சி அளிக்கின்றது.

தியாகு said...

கிருஷ்ணா,
புத்தக கண்காட்சிக்கு செல்வதென முடிவானதும் நான் தயாரிக்க தொடங்கிய வாங்கவேண்டிய புத்தகங்களுக்கான பட்டியலிற்கு உங்கள் வலைப்பூ மிகவும் உதவியது. நன்றி.

das said...

மிக சிறந்த வலைப்பூ உங்கள் முயற்சிக்கு எனது பாரட்டுக்கள்.உடல்நலம் சம்பந்தமான புத்தகங்கள் கிடைக்கும் பதிபகங்கள் மற்றும் சிறந்த உடல்நலம் சம்பந்தமான புத்தகங்கள் குறித்த உங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கவும

das said...

மிக சிறந்த வலைப்பூ