காளி நாடகம்: உண்ணி.ஆர்
விலை: 50 ரூபாய் தமிழில்: சுகுமாரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
Asianet News -ல் பணிபுரியும் உண்ணி.ஆர் தற்கால மலையாள எழுத்தாளர்களில் முக்கியமானவராகத் திகழ்கிறார். இவருடைய சிறுகதைகளுக்கு கேரளா அளவிலான பல முக்கியமான விருதுகள் கிடைத்திருக்கின்றன.
உண்ணி எழுதி வெளிவந்த 12 சிறுகதைகளை சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அதனைக் 'காளி நாடகம்' என்ற பெயரில் உயிமைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவருடைய எழுத்தின் பலமே கதையின் மாந்தர்களுடன் நம்மைப் பயணம் செய்ய வைத்து இறுதியில் கதையின் உபபாத்திரங்களுடன் நம்மையும் ஒருவராக நிற்கவைப்பதுதான்.
'காளி நாடகம்' என்ற முதல் கதையில் வரும் மையப் பாத்திரமான கணவனைப் பிரிந்து வாழும் காளியம்மையுடன் நம்மைப் பணயம் செய்ய வைத்து இறுதியில் காளியம்மையின் தம்பி மனைவி குட்டி மாலுவுடன் நம்மையும் ஒருவராக நிற்க வைக்கிறார்.
'மூத்திர ராக்ஷசம்' கதையில் நாடு வீட்டில் மலம் கழிக்கும் தந்தையை அழைத்துக் கொண்டு மகன் நாடு ராத்திரியில் வயல் வெளிகளைத் தாண்டி ரயில் தண்டவாளத்திற்கு அருகே செல்லும் போது, எதற்காக அவன் தந்தையை அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறான் என்று யோசித்தவாறு நம்மையும் அங்கு நிற்கவைக்கிறார்.
'ஆலிஸின் அற்புத உலகம்', 'பாதுஷா என்ற கால்நடையாளன்', 'மூன்று பயணிகள்', 'விடுமுறை நாள் கொண்டாட்டம்' என அனைத்து கதைகளிலும் உண்ணியின் அற்புதமான கற்பனை வெளிப்படுகிறது.
இவருடைய படைப்புகளில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதா மாந்தர்கள் விலங்குகளுடன் பேசுவது போல் சித்தரித்திருக்கிறார். 'அது, பூச்சி உலகம், பாதுஷா என்ற கால்நடையாளன்' போன்ற கதைகள் இதற்கு உதாரணம்.
கவிஞர் சுகுமாரன் முன்னுரையில் கூறியது போல் "உண்ணியின் கதாப்பாத்திரங்கள் நேற்றைய வரலாற்றையும் இன்றைய நிகழ்வுகளையும் பகடி செய்பவர்கள்.அவர்கள் இருப்பாலும் சமூக நீதியாலும் விலக்கி நிறுத்தப்பட்டவர்கள்".
இவருடைய கதை மாந்தர்களிடம் காணப்படும் வாழ்க்கையின் இருத்தலும், அன்பும், வெகுளித்தனமும் முக்கியமான குணாம்சங்கள். அந்த குணாம்சங்களே நம்மைக் கதையுடன் மேலும் ஒன்ற வைக்கிறது.
புத்தகம் உயிர்மை பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது. புத்தகத்தைப் வாங்க கீழுள்ள முகவரியில் செல்லவும்.
Kaali Nadagam: uyirmmai publications
9 comments:
தினமும் ஒரு சொல் மாதிரி, தினமும் ஒரு புத்தகமா.
ம், இந்தப் புத்தகத்தையும் லிஸ்ட்டுல சேர்த்தாச்சு.
யசோதா - நல்ல பெயர் தான், ஆனா நெறைய பேர் சோதா, சோதா, ந்னு கிண்டல் செய்ததாலும். ஆங்கில ஆஃல்பபெட்டில் y என்று ஆரம்பிப்பதாலும் இந்தப் பெயரால் நான் கொஞ்சம் சங்கடங்களை சந்தித்தால் பிடிக்காமல் போயிற்று. ஆனா என் வீட்டு மக்கள் என்னை யசோ என்றுதான் விளிப்பார்கள்.
சாரதா - நண்பர்களுக்கிடையேயான பெயராகிற்று.
ஹா ஹா ஹா... சோதா! எல்லா இடங்களிலும் இந்த பெயர் இப்படிதான் பருவும் போலிருக்கிறது. சரி சரி சாரதா என்றே அழைக்கிறேன்.
அது 80 பக்க புத்தகம் தான் சாரதா... இரண்டு நாட்களில் படித்தேன். நல்ல மொழி பெயர்ப்பு. சுகுமாரனுடைய 'மதிலுகள்' குறுநாவலை ஏற்கனவே படித்திருந்ததால் இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.
உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். வாங்கிப் படித்தால் உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும். நன்றி...
மருவும் என்பதற்கு பதிலாக பருவும் என்று தவறுதலாக எழுதிவிட்டேன்.
நீங்கள் இப்படி அடிக்கடி புத்தகம் வாசிப்பது பொறாமையாக( என்னால முடியலயே. 2 கிழமையாக நெடுங்குருதி வாசிக்கிறேன்)இருந்தாலும்
எமக்கும் நல்ல புத்த அறிமுகம் கிடைப்பதில் சந்தோசம் தான்.
புதிய புத்தகங்களை எப்படி தெரிவு செய்வீர்கள்?
list போட்டு வைத்திருப்பீர்கள் போல.
Thanx for sharing.
Krish... Plz check your G mail.
Cheers
Surya
பொதுவாக பெரிய படைப்பாளிகளின் பட்டியலை வாசித்து அதிலிருந்து தெரிவு செய்வேன். அதுமட்டுமில்லாமல் வாரத்தில் இரண்டு நாள் எழும்பூரில் இருக்கும் கன்னிமரா நூலகம் நிரந்தரப் புத்தகக் கண்காச்சிக்கு சென்று புத்தகங்களை தெரிவு செய்வேன். மேலும் நண்பர்களுடைய பரிந்துரையிலும் வாங்குவேன்.
வாசுகி உங்களுடைய மின்னசலை எனக்கு அனுப்புங்கள் ஏதாவது புத்தகம் பிடித்திருந்தால் உங்களுக்கு அனுப்பிகிறேன்.(enathu.payanam@gamil.com)
சீனாவைப் பற்றி கேட்டிருந்தீர்களே. ஒரு சில இங்கே:
1. சீனப் பெருஞ்சுவர்(ஜெயந்தி ஷங்கர்), 2. இந்திய சீன எல்லைப் பிரச்சனை: (ஞானப் பிரகாசம்) 3. இந்தியாவின் பிடியில் இந்தியா, 4.மக்கள் சீனம்... இந்தப் புத்தகங்கள் எல்லாம் கிடைக்கிறதே.
தகவலுக்கு மிக்க நன்றி.
அதுமட்டுமில்லாமல் வாரத்தில் இரண்டு நாள் எழும்பூரில் இருக்கும் கன்னிமரா நூலகம் நிரந்தரப் புத்தகக் கண்காச்சிக்கு சென்று புத்தகங்களை தெரிவு செய்வேன்.
ஆஹாஹா
இதுக்கு ரொம்ப பக்கத்துல தான் நான் இருக்கேன்.
போயிட்டா போகுது :)-
தேடிப் பார்த்தால் நிறைய புத்தகங்கள் அங்கு கிடைக்கும். சிறிது கழிவுடன் விற்பனை செய்கிறார்கள். நிச்சயம் செல்லுங்கள் சாரதா. காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, ஆனந்த விகடன், வானதி, க்ரியா, கண்ணதாசன் என ஏகப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் அங்கு கிடைக்கிறது. ஆனால் சீக்கிரமே விற்று தீர்ந்துவிடும்.
அரசு நடத்தும் கண்காட்சி என்பதால் விற்று தீர்ந்த புத்தகங்கள் உடனுக்குடன் அங்கு கிடைப்பதில்லை. அதுதான் எரிச்சலாக இருக்கும்.
Post a Comment