கி ராஜநாராயணன் அவர்கள் கிராமியக் கதைகளுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். தாத்தா சொன்ன கதைகள், கிராமியக் கதைக் களஞ்சியம், குழந்தைக் கதைகள், கரிசல் கதைகள் என பண்முகமாக வட்டார இலக்கியத்திற்கு தனது பங்கினை ஆற்றியுள்ளார்.
கிராமிய எழுத்தில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு இவர் எழுதிய பல தொடர்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அவற்றில் கோபல்ல கிராமத்து மக்கள் என்ற இவருடைய படைப்பிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. மேலும் நம் முன்னோர்களுடைய வழக்கு மொழி அழிந்து வருவதால், தனது கடின உழைப்பின் மூலம் ஆராய்ச்சி செய்து வட்டார மொழிக்கான ஒரு அகராதியே தயாரித்துள்ளார். நான் நேரில் சென்று பார்க்க ஆசைப்படும் நபர்களில் இவரும் ஒருவர்.
கோபல்ல கிராமம் (Rs: 80)
கோபல்ல கிராமத்து மக்கள் (Rs:120) - கி ராஜநாராயணன்
வெளியீடு: அன்னம்
ஒவ்வொரு கிராமத்திலும் கோவில் மாடு சுற்றிக்கொண்டு இருக்கும். கோபல்ல கிராமம் மட்டும் விதிவிலக்கா என்ன?. அப்படி கோபல்ல கிராமத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் கோவில் மாட்டை மையமாக வைத்தே கோபல்ல கிராமம் நாவலானது கிராமத்தின் எழிலோடு நடைபோடுகிறது.
சிறு வயதில் தவறு செய்தால் கோவில் மாடு என்று திட்டுவார்கள். ஆனால் அந்த ஜீவனுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தி நாவலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்.
கோபல்ல கிராமத்து மக்கள் கதையானது கரிகால் மக்களுடைய கலாச்சாரம் மற்றும் அவர்கள் பேசும் மொழியோடு கலந்து செல்கிறது. நாவலின் ஒரு இடத்தில் உடன் கட்டை ஏறுதல் பற்றியும், அதன் முறைகளையும் அழகாக சொல்லி இருப்பார். இயற்கையோடு பிணைந்து வாழும் கிராமத்தின் உணர்வு பூர்வமான வாழ்க்கையை தனது தேர்ந்த எழுத்தின் மூலம் தொய்வில்லாமல் கொண்டுசென்றுள்ளார்.
No comments:
Post a Comment