Saturday, May 9, 2009

Ilaigalai viyakum maram - s ramakrishnan

இலைகளை வியக்கும் மரம்: எஸ். ராமகிருஷ்ணன் விலை: 70 ருபாய்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம்

எஸ். ராம கிருஷ்ணனின் படைப்புலகம் பெரும்பாலும் பயணங்களையும், மனிதர்களுடனான நேசத்தையும் முன்னிறுத்துபவை. "இலைகளை வியக்கும் மரம்" எஸ். ராவால் எழுதப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் தமிழில் வெளிவந்த முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பாகும். இவையாவும் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை மற்றும் தினமணி போன்ற இதழ்களில் வெளிவந்தவை.

படைப்பார்வத்தால் ஆரம்ப நாட்களில் மேற்கொண்ட பயணங்கள், சென்னையில் தங்குமிடமில்லாமல் தவித்தது, வட்டார இலக்கியத்தின் மீதான ஈடுபாடு, படைப்பாளிகளைச் சென்று சந்தித்தது, தீவிரமான புத்தக வாசிப்பு, கிராமியக் கலையான கொட்டு வாத்தியம், பாவைக் கூத்து போன்றவற்றின் அழிவு, இயற்க்கை விவசாயம், மொழிபெயர்ப்பு, தினசரி வாழ்வின் சம்பவங்கள் என அவர் அவதானித்த முக்கியமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். மேலும் அவர் சந்தித்த இடர்களையும், உதவிய மனிதர்களுக்கு சொல்ல வேண்டிய நன்றியையும் தவறாமல் கூறி மெய் சிலிர்க்கிறார்.

தமிழில் ஆகச் சிறந்த குழந்தைகள் இலக்கியம் இல்லாததைக் கூறி வருத்தப்படுகிறார். பள்ளிகளிலேயே மூத்த படைப்பாளிகளின் சிறார் சிறுகதைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார். பரீட்சை நேரத்தில் மேற்கொள்ளும் சாலைப் பராமரிப்பு பணிகள் எவ்வளவு தடங்கல்களை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்று அவருடைய இணையத்தளத்தில் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறார் (பதில் இல்லாத பரிட்சை).

உலக சினிமா, நாடகம் என தனது கட்டுரைகளில் மேலும் பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நகுலனைப் பற்றி இதற்கு முன்பே இவர் எழுதி படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இங்கு வாசிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மற்றபடி சில கட்டுரைகள் துணையெழுத்து மற்றும் காலச்சுவடை நினைவுபடுத்தும் போது சற்றே சோர்வடைய வைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் சில பிழைகள் இருக்கிறது என புத்தக வெளியீட்டில் சிறப்புரையாற்றிய திரு: சுகுமாரன் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அவற்றைப் படிக்க கீழேயுள்ள திண்ணை இணையத் தளத்திற்குச் செல்லவும்.

சுகுமாரின் விமர்சனம்

9 comments:

வாசுகி said...

நீங்கள் கூறியுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கிறது.
"இலைகளை வியக்கும் மரம்"
வாசிக்க விரும்பிய புத்தகம்.இதுவரை வாசிக்கவில்லை.

வாசுகி said...

நான் கடைசியாக எஸ்.ராவின் உபபாண்டவம் வாசித்தேன்.
மகாபாரதத்தை வித்தியாசமான கோணத்தில் உணர முடிந்தது.
இதற்கு முன் நான் துரியோதனன், காந்தாரி போன்றவர்களின் இன்னொரு பக்கத்தை யோசிக்கவே இல்லை.


இதை புனித நூலாக பார்க்காமல் வாழ்க்கை நூலாக பார்க்குமாறு ஸ்.ரா சொல்லியுள்ளார்.


சிறு வயதில் மகாபாரதம் வாசித்த போது சந்தோசமான அனுபவமாக‌ இருந்தது.
அபிமன்யு மரணம் மட்டும் தான் எனக்கு கவலை தந்தது என்று சொல்லலாம்.
ஆனால் உபபாண்டவம் வாசித்து முடித்து பல நாட்கள் சென்றும்
மனம் முழுவதும் கவலை தான் இருக்கிறது.
முக்கியமாக திரௌபதி கதாபாத்திரம்.
அதிர்ச்சியாகவும் இருந்தது.
குழப்பமாகவும் தான்.

நீங்கள் உங்களுக்கு பிடித்த நூலாக மகாபாரதம் என இல் கூறியுள்ளீர்கள்.
உபபாண்டவம் வாசித்தபின் மகாபாரதம் பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள் என அறியவேண்டும் என ஆர்வமாக இருக்கிறது.
உங்களுக்கு விரும்பினால் சொல்லவும்.

Unknown said...

நீங்கள் சொல்லியது போல் எனக்கு மகாபாரதம் முகவும் பிடித்த நூல். எஸ். ராவின் எழுத்துக்கள் இது போன்ற உணர்வைத் தருவது இயல்பே. நீங்கள் சற்றும் எதிபாராத கோணத்தில் இருப்பதாலேயே அந்த உணர்வு உங்களுக்கு தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் ராஜாஜி எழுதிய பாரதக் கதை படித்திருக்கிறீர்களா?

மிக எளிமையாக இருக்கும். இன்றும் கூட கையிலெடுத்தாள் அலுப்புத் தட்டாமல் படிக்கலாம். பருவம் நாவல் கூட ஒரு வகையில் அருமையான படைப்பு. இது போல நெறைய புத்தகங்கள் இருக்கின்றன வாசுகி.

Unknown said...

ஆனால் எஸ். ரா எழுதியது ஒரு புனைவு என்பதை மறந்து விடாதீர்கள் (பாரத் கதைகளையே புனைவு என்பவர்களும் இருக்கிறார்கள்). எனவே புனைவு இலக்கியத்தின் கோணத்திலேயே இதை அணுக வேண்டும்.

அன்பேசிவம் said...

கிருஷ்ணா, எழுதியவுடன் எனக்கு mail செய்வதாக சொல்லியிருந்தீர்கள், மறந்துவிட்டீர்கள் போல, நேற்றுத்தான் மூன்று நாள் விடுப்பிற்கு பிறகு அலுவலகம் வந்தேன். நன்றி எஸ்.ரா.வின் புத்தக அறிமுகத்திற்கு. இன்னும் வாங்கவில்லை, நிச்சயம் படித்தபிறகு தொடர்பு கொள்கிறேன்.

Unknown said...

நான் உங்களிடம் குறிப்பிட்ட நாளன்றே எழுதி முடித்து உங்களுக்கு chat-ல் link அனுப்பி இருந்தேன். நீங்கள் அதைப் பார்க்க தவறி இருக்கலாம். வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்தான். பதிவினைக்கண்டு பின்னூட்டமிட்டதற்கு நன்றி முரளி.

Anonymous said...

Good to see your blog, I will go through it at leisure. I am really happy that you have picked up reading good books.

A. Dhandapani

PS: I will be shifting to Hyd sometime in the next month

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Thanks for your blessings ThambiAnna.

உங்களிடமிருந்து பழகியதுதானே. சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க...