குதிரைகளின் கதை: பா ராகவன்
விலை: 35 ருபாய்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
சில நாட்களுக்கு முன்பு என் மனதிற்கு நெருக்கமான தோழர்களிடமிருந்து ஒரே மாதிரியான SMS message கைபேசியில் வந்திருந்தது.
"மகாத்மா காந்திக்கும், நடிகர் ஷாருக்கானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்ன?". எனக்கு ஆச்சர்யம் அளித்த கேள்விகளில் இதுவும் ஒன்று. அதெப்படி காலம் கடந்து வாழும் தேசத்தலைவர் நடிகர் ஒருவருடன் ஒத்துப்போக முடியும். இல்லை நடிகர் தான் தேசத் தலைவர் அளவிற்கு உயர்ந்து விட்டாரா? அவர்கள் என்னை அதிகம் யோசிக்க விடவில்லை.
"இரண்டு பேருமே தென் ஆப்ரிக்காவிலிருந்து அவமானப்பட்டு திரும்பினார்கள்" என அவர்களே பதிலும் கொடுத்திருந்தார்கள்.
என்னுடைய பதின் வயதிலிருந்து நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை ஆதலால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
கடந்த ஞாயிறன்று போன்னேரிக்குச் சென்றேன். நண்பன் ராஜேஷ் தான் என்னை தெளிவுபடுத்தினான். தென்னாப்ரிக்காவில் 20-20 IPL கிரிக்கெட் Match-ல் விளையாடிய நடிகர் ஷாருக்கானின் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம்" (kolkata knight riders) தோற்று வெளியேறியதால் இந்த naughty SMS message -ஐ பரிமாறிக் கொள்கிறார்களாம்.
சிறு வயது முதலே காந்தியை அவமானகரமான விஷயங்களுடன் தொடர்புபடுத்தியே பார்த்துப் பழகிவிட்டோம். காந்தி கணக்கு, காந்தி கண்ணாடி இன்னும் பல... அந்த வகையில் இதுவும் ஒன்று என நினைத்துக் கொண்டேன்.
இந்தியர்களைத் தவிர வேறு நாட்டினர் இது போன்ற குறும்புகளைச் செய்வார்களா என்று தெரியவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் ஏதாவது கதைகள் படிக்கலாம் என்று யோசித்தபோது பா. ராகவன் குமுதம் ஜங்கஷனில் எழுதி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த 'காந்தி சிலைக் கதைகள்' அகப்பட்டது. புத்தக வடிவாக "குதிரைகளின் கதைகள்" என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.
மகளின் வீட்டிலிருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர், வீட்டிற்கு சொல்லாமல் துறவு மேற்கொள்ளும் நபர், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவன், வேறுபட்ட (இந்து & கிறித்துவ) மதத்தினரின் காதல் பிரச்சனை, கடற்கரையில் குதிரை சவாரி செய்து பிழைப்பு நடத்துபவன், விடுதைலைப் போரில் பங்கேற்க முடியாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி, ஜெயிலுக்கு சென்று வரும் தமிழ் ஆசிரியர் என வெவ்வேறு நபர்களைப் பற்றிய எட்டு கதைகள் இருக்கின்றன.
அனைத்து கதைகளும் ஏதோ ஒரு வகையில் காந்தி சிலையருகே நடப்பது போல் கதையைக் கொண்டு சென்றுள்ளார். வாழ்க்கைப் பந்தையத்தில் லாடமடிக்கப்பட்ட குதிரைகள் போல் தங்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கை நோக்கி ஓடும் மனிதர்களைப் பற்றிய கதையில் காந்தியை அங்கமாக எதோ ஒரு விதத்தில் சேர்க்கிறார். காந்தியத் தத்துவத்தை ஊன்று கோலாக அவர்களுடைய வாழ்க்கையில் முன்னிறுத்துகிறார்.
'கூறாமல் சந்நியாசம்' என்ற கதையைப் படிக்கும் போது பா.ராகவனின் "அலகிலா விளையாட்டு" குறுநாவல் தவிர்க்க முடியாமல் ஞாபகத்திற்கு வந்தது. அந்த நாவலின் சாயல் இல்லையென்றாலும் ஏனோ என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை.
பா.ராவின் வித்தியாசமான சிறுகதை முயற்சி. பாராட்டப்படவேண்டிய முயற்சியும் கூட. அரசியல் சார்ந்த கட்டுரைகளிலும், ஆராய்ச்சிகளிலும் தனது முழு கவனத்தையும் செலுத்துவதால் கதை மற்றும் நாவல் சார்ந்த முயற்சிகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளார். ஒரு வகையில் நமக்கு அது பெரிய இழப்புதான்.
6 comments:
கிருஷ்ணா
எனக்கும் காந்தியை இதே மாதிரி நையாண்டி பண்ணுபவர்களை கண்டால் எரிச்சலாக வரும்..உதரனத்திற்க்கு காந்தி கணக்கு என்று சொல்லுபவர்களை..
எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.
புத்தங்களை இணையத்தில் வாங்குவது எப்படி..
சில நல்ல தமிழ் புத்தகங்கள் பரிந்துரையுங்கள்..
ஆன்மிக சம்பந்தபட்ட புத்தகம் பெயர் ஒன்றும் வேண்டும்...
அந்த இனைய முகவரி கொடுங்கள்..கண்டிப்பாக வாங்குவேன்..
இணையத்தின் முலம் வாங்கும் புத்தகம் எந்த வடிவில் இருக்கும்..
PDF..??
NANBARE PA.RAGAVENIN MAYA VALAI PADICITINGALA?
PLS WRITE SOMETHING ABT IT
I bought ‘Mayavalai’ at six months back. Also I finished reading about Al-Qaeda. But need to leaf over more then 1000 pages. I will do it as soon as possible. Thanks a lot for your comments and encouragement Vikki.
Note: ‘Thuppaki Mozhi’ – This is a research book about Indian Terrorism, published by ‘Kizhakku Pathipagam’. Have you ever read about this?
http://nhm.in/shop/978-81-8368-063-9.html
கிருஷ்ணா, பா.ராவின் புத்தமொன்று என் நண்பரால் எனக்கு பரிசளிக்கப்பட்டு இன்னும் பிரிக்க படாமலேயே கிடக்கிறது. இப்போதுதான் கடிகாரம் அமைதியாக எண்ணி கொண்டிருக்கிறது படித்துகொண்டிருக்கிறேன்.
பா ராகவன் மற்றும் கிழக்கு பதிப்பகம் மேல் எனக்கு தனி மதிப்பு உண்டு
கண்டிப்பாக படிக்கனும்
அரசியல் சார்ந்த அவருடைய புத்தகத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். பா-ரா ஒரு சிறந்த படைப்பாளி. நிச்சயம் வாசியுங்கள்.
Post a Comment