Wednesday, March 4, 2009

Burma, Union of Myanmar

இந்த புத்தகத்தின் ஆசிரியர் தனது பதின் பருவத்தில் பர்மாவை விட்டு அகதியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். ஏனெனில் பர்மா சர்வாதிகார ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டு அங்கிருக்கும் தமிழர்கள் தாயகம் திரும்பும் போது இவருடைய பெற்றோரும் தமிழகம் வந்துள்ளனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் பர்மா அடைந்த சுதந்திரம், சர்வாதிகாரம் மற்றும் படுகொலைகளை ஆதாரத்துடன் முன்வைத்து பர்மாவின் நேச நாடுகளிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். அதில் இந்தியாவும் ஒன்று.

பர்மா: க.ம. தியாக ராஜன் (Rs.125)
பதிப்பகம்: காலச்சுவடு

ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த பர்மா பிறகு ஜப்பானிடம் சென்றது. பின் ஜப்பானிடமிருந்து பிரிட்டிஷே பர்மாவைக் கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.

இந்துக்களும் பர்மியரும் பூர்வீக பழங்குடியினரும் வாழ்ந்து வந்த பர்மாவை 1935 -ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவிலிருந்து பிரித்து விடுவதென தீர்மானித்து 1937 -ல் பர்மாவை ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு உட்பட்ட தனி நாடாக பிரகனப் படுத்தியது. மேலும் 1947 -ஆம் ஆண்டு வரை பர்மாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் பிறகு பர்மாவிற்கு சுதந்திரம் அளித்தது.

1948 -ஆம் ஆண்டு முதல் சுதந்திர நாடான பர்மாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இனக் குழுக்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகளும் இருப்பினும் கறீன்கள் முக்கியமான சிறு பான்மையினராக இருந்துள்ளனர்.

கறீன்கள் மலை வாழ் பழங்குடியாக இருந்து முழுவதுமாக கிறித்துவத்திற்கு மாறியதால், தனி நாடு வேண்டி புரட்சி செய்துள்ளனர். புரச்சியை அரசாங்கத்தால் அடக்க முடியாததால் ராணுவ ஆட்சிக்கு பர்மா கைமாறியுள்ளது.

அன்றிலிருந்து கடந்த 50 வருடங்களாக பர்மிய மக்கள் காண்பதெல்லாம் துன்பம், துன்பம், துன்பம் மட்டுமே. இருந்தாலும் 2007 -ஆம் ஆண்டு புத்த துறவிகளின் மீது நடத்திய ராணுவ தாக்குதல் உலக நாடுகளை பர்மாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இருந்தாலும் அதன் நேச நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்த், தென் கொரியா, மலேசியா, சிங்கபூர், ஆகிய நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்திற்காக மௌனம் சாதிப்பதும், பர்மிய ராணுவ ஆட்சிக்கு துணை போவதையும் நூலாசிரியர் கடுமையாக சாடுகிறார்.

அந்த துன்பத்தைப் போக்க, பர்மாவை ராணுவ ஆட்சியிலிருந்து மீட்க டோ அவுன் சான் சு கீ கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் போராடுகிறார். பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்தாலும் அமைதியான முறையில், சத்தியாகிரக வழியில் போராடுவதால் இவருக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்திருக்கிறார்கள்.

பர்மாவை பற்றி தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் இது.

3 comments:

Sure said...

Great work Krishna. Read More and share more. Have u read Sujatha, Balakumaran, Akilan , Charu, Jayamohan and Jayakanthan. If it so pl. Share those writers novel also. It more interesting to review in brief format. Keep it up

Unknown said...

நண்பரே! நலம் தானே...நிச்சயமாக எழுதுவோம். நிறைய நாவல்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். ஆமாம் உங்களுடைய சமீபத்திய பதிவுகளைக் காண முடிவதில்லையே. நீங்களும் எழுதலாமே...

இவண்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

Unknown said...

you are really great krish.thanks for sharing this .