Thursday, August 20, 2009

கேள்விக்குறி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: 45 ரூபாய்

சூரியன், சந்திரன், கடல் என ஒவ்வொன்றாக உலகத்தைப் படைத்த இறைவன் ஆறாம் நாள் ஆணைப் படைக்கிறான். ஆண் தனியாளாக தோட்டத்தில் சுற்றி அலைகிறான். "இவனுக்கு ஒரு துணையை ஏன் படைக்கக் கூடாது?" என்று கடவுள் யோசிக்கிறார். ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து பெண்ணை படைக்கிறான். நிர்வாணிகளான ஆணும் பெண்ணும் கபடமில்லாமல் சந்தோஷமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

கடவுள் அவர்களிடம் "இந்தத் தோட்டத்திலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்து அனுபவியுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் ஒரு ஆப்பிள் இருக்கிறது அதை மட்டும் எடுக்காதீர்கள்... புசிக்காதீர்கள்..." என்று கூறுகிறார். அவர்களும் சம்மதிக்கிறார்கள்.

சாத்தான் பாம்பின் வடிவில் அவர்களுக்கு ஆசை கட்டுகிறது. "ஆப்பிளை சாப்பிட்டால் நீங்களும் கடவுள் ஆகலாம். நல்லது கெட்டது எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று உபதேசம் செய்கிறது. சாத்தானின் பேச்சுக்கு மயங்கிய பெண் ஆப்பிளை சாப்பிடுகிறாள். ஆணுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அதன் பிறகு சுகமான நிர்வாணம் அவர்களுக்குக் கூச்சத்தை அளிக்கிறது. கூச்சத்தைப் போக்க ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். மென்மையான இறைவனின் வருகையைக் கண்டு பயப்படுகிறார்கள்.

சாத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். அதன் மூலம் ஆதமும், ஏவாளும் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி ஏமாற்றிவிட்டார்கள்.

ஏமாற்றுவது தவறு என்று சாத்தானுக்கும், ஆதாமிற்கும், ஏவாளுக்கும் ஏன் தெரியவில்லை? இப்பொழுது என் எதிரில் வந்தால் இந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?... நிற்க.

நல்லது கெட்டதை யோசித்து அவர்களை நான் கேள்வி கேட்கிறேன் என்றால் அவர்கள் சாப்பிட்ட ஆப்பிளின் எச்சம் என்னிலும் உள்ளதா?

நான் மட்டுமா நீங்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் எத்தனை கேள்விகளைக் கேட்டு சக மனிதர்களைக் காயப்படுத்துகிறீர்கள். கீழுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியையேனும் நீங்கள் உபயோகப்படுத்தவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?
2. உதவின்னு கேட்டா யாரு செய்யறா?
3. இவ்வளவு செய்யறேன்...ஆனாலும் என்னை யாரு மதிக்கிறா?
4. என்னை எதுக்கு படிக்க வச்சீங்க?
5. நெனச்சி நெனச்சி பேசினா எப்படி?
6. என்ன ஊரு இது... மனுஷன் வாழுவானா?
7. எதுக்கெடுத்தாலும் பொய்யா?
8. வாய்விட்டு எப்படி கேக்குறது?
9. உன்னால ஒரு வேலை சாப்பாடு போட முடியுமா?
10. வீட்டுல சும்மாவே இருந்தா எப்படி?
11. நான் அழகா இருக்கேனா?
12. எனக்குன்னு யாரு இருக்கா?
13. ஏன் இப்படி இருக்கீங்க?
14. எதுக்காக இவ்வளவு அவசரம்?
15. ஒரு ஆலாலே என்ன செய்ய முடியும்?

மேலுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றை யாரேனும் உங்கள் மீதோ அல்லது நீங்கள் சக மனிதர்கள் மீதோ வீசி இருப்பீர்கள். ஆகவே ஒரு சில கேள்விகளை நாம் வாழ்கையில் சந்தித்துதான் ஆகவேண்டும். தவறுகளிலிருந்தோ அல்லது இயலாமையிலிருந்தோ சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

தவிர்க்க முடியாத அந்தக் கேள்விகளை உள்வாங்கி, தனது சொந்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி ஆனந்த விகடனில் S. Ra தொடராக எழுதியது புத்தகமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் ஒரு குட்டிக் கதையையும் சொல்லி நம்மை அசர வைக்கிறார் எஸ். ராம கிருஷ்ணன். கட்டுரைக்கு ஏற்றாற்போல் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தேர்வுசெய்த ஓவியங்கள் பாராட்டும்படியாக உள்ளது. அழகான குட்டிக் கதைகளைக் கொண்ட அற்புதமான கட்டுரைகள். கண்டிப்பாக வங்கிப் படிக்கலாம்.

Details: Kelvikuri (Rs.45) - S.Ramakrishnan, Vikatan publications, chennai.

12 comments:

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

வாசித்திருக்கிறேன் நல்ல நூல். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

கே.என்.சிவராமன் said...

அழகா எழுதியிருக்கீங்க :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Unknown said...

@ ஷிஜூசிதம்பரம்

நன்றி நண்பரே...

@ பைத்தியக்காரன்

சிவராம்... உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. பல பதிவுகளுக்கான உங்களுடைய பின்னூட்டங்களையும் கவனமாகப் படித்திருக்கிறேன். உங்களுடைய ஆழமான வாசிப்பனுபவம் அதில் வெளிப்படும்.

உங்களுடைய பின்னூட்டம் எனக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.

geethappriyan said...

Krishna Prabhu said...

உங்களுடைய பதிவுகள் அருமை. ராஜாவின் தீவிர ரசிகன் நான்.

"காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."
-என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது. இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா? அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்ய சுட்டியைத் தர முடியுமா? தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்த வழி இல்லை. ரொம்ப பழைய பாடல்.

என்ன படம் என்று தெரிந்தால் சுலபமாக கிடைத்துவிடும். ஆகவே படத்தின் பெயரையாவது கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி...

உங்களுடைய நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன்.

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.
www.online-tamil-books.blogspot.com
August 21, 2009 3:35 AM
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

கிருஷ்ன பிரபு,
கண்டிப்பாக தேடி அனுப்புகிறேன்
முதல் வருகைக்கும் அற்புத கருத்துக்கும் நன்றி
August 21, 2009 4:08 AM
கே.ரவிஷங்கர் said...

//காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."
-என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது.//

இது சிம்மேந்திர மத்தியமத்தில்(ராகம்)போட்ட பாட்டு.
படம்: கோடை மழை
சைட்: www.coolgoose.com

முதலில் ரிஜஸ்டர் செய்யவேண்டும்.பிறகு D.Load

Kodai mazhai என்று டைப் செய்து தேடவும்.
அல்லது kaatrodu kulalin
August 21, 2009 6:49 AM
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

நண்பர் ரவிசங்கர்
அருமையாக விடையை சொன்னீர்கள்
எவ்வளவு கூர்மையான நினைவுகள் ?,
மிகவும் பயனுள்ள தகவல்
மீண்டும் நன்றி

J S Gnanasekar said...

வாங்கப் போகிறேன்.

Unknown said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் மற்றும் நண்பர் ரவிஷங்கருக்கு

மிக்க நன்றி. பாடலை தரவிறக்கம் செய்துவிட்டேன்.

உங்களுடைய இளைய ராஜாவின் பதிவு அருமை. அவரைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.

@ J.S.ஞானசேகர்

நிச்சயமாக நல்ல புத்தகம். தாராளமாக வாங்கலாம்.

Venkatesh Kumaravel said...

எஸ்.ராவின் எழுத்துவடிவம் வசீகரமான ஒன்று. தீவிரமான இலக்கிய வட்டாரம் / வெகுஜன எழுத்து இரண்டிற்குமான இடைவெளியை நிரப்புவன அவரது ஆ.வி, கணையாழி, தீராநதி எழுத்துகள். இந்தத்தொடரின் சில பகுதிகளை மட்டும் பயணங்களின் போது வாசித்திருக்கிறேன். நேர்மையாகச் சொல்வதானால், பிடிக்கவில்லை.

priyamudanprabu said...

இந்த புத்தகம் என் வீட்டில் வாங்கி வைத்துள்ளார்கள் , தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் போது கிடைக்கும் , படித்துவிட்டு சொல்கிறேன்


http://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html

அந்த ஆதாம்-ஏவாள் கதையை படித்த பிறகு நான் எழுதிய பதிவை பருங்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு. நானும் வாசித்திருக்கிறேன். எஸ்ராவுக்கே உண்டான தனித்துவமான நடையில் அமைந்த சிறு புத்தகம்.

-ப்ரியமுடன்
சேரல்

Manikanda kumar said...

அருமையான விமர்சனம்.

இந்த புத்தகம் விகடன் தளத்தில் விற்பனைக்கு இல்லை. சென்னையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரியுமா?

Unknown said...

@ வெங்கிராஜா

பின்னூட்டத்திற்கு நன்றி வெங்கி...

@ பிரியமுடன் பிரபு

உங்களோட பதிவை படித்தேன் நன்றாக இருக்கிறது பிரபு.

@ சேரல்

நன்றி சேரலாதா உன்னுடைய சமீபத்திய பயணப் பதிவு நன்றாக இருந்தது. தொடருங்கள்.

@ Manikanda kumar

பின்னூட்டத்திற்கு நன்றி மணிகண்டன். இந்தப் புத்தகத்தை விகடன் அலுவலகத்தில் வாங்கினேன். சில நேரங்களில் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வேறு எங்காவது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாங்கி வாசித்திருக்கிறேன்.

ப்பா, எப்படியோ தொடர்ந்து நீங்கள் எழுதிய புத்தக விமர்சனத்தில் இந்தப் புத்தகத்தையாவது படித்துவைத்திருக்கிறேனே :)