Friday, March 20, 2009

Katha Vilasam - S. Rama Krishnan

கதாவிலாசம்: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 150)
பதிப்பகம்: விகடன் பிரசுரம்

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த துணை எழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய படைப்புகள் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது அனைவரும் அறிந்ததே. அவற்றுள் கதாவிலாசம் சிறிது வித்யாசமான கட்டுரைகள் அடங்கிய புத்தக வடிவம்.

தனது வாழ்வில் நடந்த சுவைமிக்க சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தனக்குப் பிடித்த சிறந்த தமிழ் எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் இந்தப் புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளார்.

பாரதி, புதுமைப் பித்தன், கி. ரா, சுரா தொடங்கி சம கால எழுத்தாளர்களான கோணங்கி, ஜெய மோகன் வரை அனைவரது எழுத்துக்களிலும் தனக்கு பிடித்த படைப்புகளை சிலாகித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த ஐம்பது எழுத்தாளர்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

2 comments:

priyamudanprabu said...

எஸ். ராம கிருஷ்ணன்
அவர்களின் எழுத்துக்கள் தனி அழகு
எளிதாக படிக்கும் படி இருக்கும்

Unknown said...

பின்னூட்டத்திற்கு நன்றி பிரபு. நீங்கள் சொல்லுவது சரிதான். எளிய சொற்களின் ஊற்று அவர். அதுனே அவருடைய பெரிய பலம்.