இந்தியப் பிரிவினை: மருதன் (Rs. 80)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu
பா.ராகவன் எழுதிய மாயவலை என்ற புத்தகத்தில் அவருடைய முன்னுரையில் மருதனை தனது சீடனென்றும், மாணவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மேல் நான் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. கல்கியில் எழுதத் தொடங்கிய இவர் இப்பொழுது கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர்களில் ஒருவர்.
இந்தியப் பிரிவினை பற்றி பள்ளிக்கூடத்தில் இரண்டு மதிப்பெண் வினாவிற்கான பதிலாக படித்ததோடு சரி. ஆனால் அதற்குள் இவ்வளவு பேருடைய கதறல்களும், ஓலங்களும் இருக்கிறதா என படிக்க படிக்க அதிர்ச்சியாக இருந்தது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று உறுதியானவுடன், காந்திஜிக்கு ஒரு புறம் மகிழ்ச்சி மறுபுறம் துக்கம். முஸ்லீம் சிறுபான்மையினரான தங்களுக்கு பெரும்பான்மையினரான இந்துக்களால் எந்த நேரத்திலும் ஆபத்துதான். எனவே தனி மதம்,மொழி,கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கமுள்ள எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கொள்கையில் ஜின்னா உறுதியாக இருந்தாராம். அதுபடியே பிரிந்து சுகந்திர நாடான பாகிஸ்தானையும், கிழக்கு பாகிஸ்தானையும் உருவாக்கினார். கிழக்கு பாகிஸ்தான் பிறகு பங்களாதேஷ் ஆனது தனிக்கதை.
"தேசம் பிரிக்கப்பட்டால் அது என் சடலத்தின் மீதுதான் துண்டாடப்படும்" என காந்திஜி முழங்கினாரம். இந்தியாவின் அப்போதைய வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன் கூட இது குறித்து கவலையுடன் தான் இருந்தாராம். இதைப் பற்றி நேரு, படேல் மற்றும் ஜின்னாவுடன் பலவாறு ஆலோசித்தாராம். எந்த பேச்சு வார்த்தையும் பலன் தராததால் இன ரீதியிலான பகுதிகளை பிரிக்க வேண்டிய சூழல் வந்தது.
பிரிப்பது என்றால் அவ்வளவு சாதாரண காரியமா என்ன? தலைமுறை , தலைமுறையாக வாழ்ந்த இடங்களையும், வாழ்வாதாரங்களையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாபை ஒட்டிய சீக்கியர்களும், முஸ்லீம்களும் தான்.
பிரிவினையால் நடந்த கலவரத்தில் இழப்புகளை அதிகம் சந்தித்தது அப்பாவி மக்களும், பெண்களும்தான். அதுவும் பெண்களின் மீதான பாலியல் பலாத்காரம் சொல்லி தீராது.
அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் பிரிவினை பகுதிகளில் இருந்து மக்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்திருந்த ரயிலில், படுகொலையை கண்ட நிலைய அதிகாரி சாநிசிங்கின் ஓலக்குரலோடு இந்தப் புத்தகம் தனது அத்தியாயத்தை தொடங்குகிறது. அதன் பிறகு நடந்த சம்பவங்களால் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சீரழிந்து போயிருக்கிறது. தேசம் துண்டாடப்பட்டதால் தனது முகங்களையும், உறவுகளையும் இழந்த அப்பாவி மக்களின் கதறல்களை சொல்லும் சரித்திரம் தான் இந்த புத்தகம்.
பி.கு: இந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் மருதனின் வலைத்தளத்திற்கு செல்ல இங்கு சுட்டவும் - Writer Marudhan
4 comments:
இப்பதிவைப் பார்த்தபிறகுதான் இப்புத்தகம் வாங்கிப் படித்தேன்.
இன்றைய இந்தியா பாகிஸ்தான் பற்றி சொல்லும், புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் கடைசிவரிகளில் ஆசிரியர் அசத்திவிட்டார்.
முன்னும் பின்னும் காலங்களில் தாவும், அலைபாயுதே ஸ்டைல் புத்தகநடை கொஞ்சம் குழப்புவதுபோல் இருந்தாலும் சலிப்பில்லாத நடை.
இப்புத்தகத்தின் ஆகஸ்ட் 15, 1947 இரவு நிகழ்ச்சிகள் விவரிப்பு எனது விருப்பம். குறிப்பாக மழையும், நேருவின் மனநிலையும்.
- ஞானசேகர்
உங்களுடைய பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடைசியாக உங்களுடைய போகிமரம் பதிவில் ஒரு நீண்ட கவிதையை வாசித்ததாக ஞாபகம். "புத்தகம்" பதிவில் கூட நல்ல பதிவுகளை இடுகிறீர்கள். தொடருங்கள். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள் ஞான சேகர்.
நன்றி நன்றி நன்றி.. நான் தேடிய மருதனின் பக்கம் உங்கள் வழிக் கிடைத்தமைக்கு நன்றி.. நண்பரே..
@ ஷிஜூசிதம்பரம்
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
Post a Comment