Friday, March 27, 2009

Nilamellam Raththam - Pa Raghavan

நிலமெல்லாம் ரத்தம்: பா. ராகவன் (Rs. 350)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Nilamellam Raththam - Pa. Raghavan

இன்றுள்ள இனப்பிரச்சனைகளில் உலகமே கூர்ந்து கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை. பா. ராகவன் ஆழ்ந்து அலசி பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்து புத்தகத்தைக் கொண்டுசென்றுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு இடம் இல்லாமல், இதுதான் எங்கள் நாடு என சொல்லிக்கொள்ள ஒரு மண் இல்லாமல் உலகமெல்லாம் அகதிகளாக வாழ்ந்த பழமையான இனம் யூத இனம்.

இவர்கள் பழங்கால ரோம அரசர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதால் அமெரிக்கா, பிரட்டன், அயர்லாந்து, ஜெர்மன் என ஐரோப்ப தேசம் முழுவதும் பரவி வாழ்ந்தனர். ஹிட்லர் காலத்தில் யூதர்கள் பட்ட துயரம் உலகம் அறிந்ததே. இருந்தாலும் அவர்களுடைய பலம் ஒற்றுமையும், கூர்ந்த அறிவாளித்தனமும் தான்.

இப்படி பரவியிருந்த யூதர்கள் அனைவரும் சமீப நூற்றாண்டுகளில் ஒன்று சேர்ந்து "ஜியோனிசம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி யூதர்களுக்கென சில கொள்கைகளை வகுத்தனர். அதன்படி தங்களுடைய பூர்வீகமான பாலஸ்தீன மண்ணில் அமைப்பின் சார்பாக ஏழை பாலஸ்தீன விவசாயிகளிடம் பல ஏக்கர் நிலங்களை அதிக விலைக்கு வாங்கி போட்டுள்ளனர். அதற்கான பணத்தை உலக யூதர்கள் ஜியோனிச அமைப்பிற்கு அளித்துள்ளனர்.

இந்த நேரத்தில்தான் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்திருக்கிறது. உலகப் போரின் முடிவில் இஸ்ரேல் யூத இனத்திற்கென்று தனி நாடுகேட்டு விண்ணப்பித்துள்ளது. அவர்களுடைய ஆசையிலும் குத்தமில்லை. இரண்டாம் உலகப் போரில் யூதர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தனி நாடு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. (மறைமுகக் காரணம் அமெரிக்காவின் துருப்புகளுக்கு அரேபிய நிலத்தில் இடம் வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு)

ஐநா சபையின் ஆலோசனைப்படி 1948-ல் பாலஸ்தீன மண் இரண்டாக துண்டாடப்பட்டு பாலஸ்தீனாகவும், இஸ்ரேலாகவும் மாறியது. அது முதல் அங்கு பிச்சனைதான். இஸ்ரேல் பிரிந்து சென்ற ஓராண்டுக்குள் அருகிலுள்ள நாடுகளை ஆக்ரமித்துள்ளது. ஐநா தலையிட்டும் ஆக்ரமித்த நிலங்களை திரும்பித்தர மறுத்துள்ளது. இவை அனைத்திற்கும் மறைமுகக் காரணம் உலகின் பெரிய அண்ணன்(அமெரிக்கா).

முக்கியமான பிரச்சனை என்னவெனில் இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேம் தான். இது யூத, கிறித்துவ மற்றும் முஸ்லீம்களுக்கான புனித இடம். யூதர்களின் தந்தையாக கருதப்படும் ஏப்ரகாம் பிறந்த இடம் இது, ஏசுவிற்கும் முக்கிய இடம், அதுபோல் முகமது நபி சொர்கத்திற்கு சென்று வந்ததாகக் கூறப்படும் குகை இங்குதான் உள்ளது. ஆகவே இது இடத்திற்கான பிரச்சனை என்பதையும் தாண்டி, மூன்று மதங்களையும் கடைப்பிடிக்கும் மக்களுடைய உணர்வுப் பிரச்சனை.

யூத, கிறித்துவ, இஸ்லாமிய மார்கத்தின் தொடக்கம், கிறித்துவ மதத்தின் பரவல், இஸ்ரேலின் தோற்றம் அதன் அடாவடித்தனம், அமெரிக்காவின் வஞ்ச வேலை, பாலஸ்தீன மக்களின் போராட்ட இயக்கம், உளவு அமைப்புகளின் வேலை என அனைத்தையும் சொல்லும் விறுவிறுப்பான புத்தகம்.

பி.கு: இஸ்ரேல் பிரதமர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் ஆகியோருக்கு இரு நாடுகளின் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக 1990 -களின் இறுதியில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான பரிசு வாங்கியவர்கள் இறந்துவிடார்கள், இன்றுவரை இருநாட்டு மக்களுக்கும் அமைதி என்பது உறக்கத்தில் கூட இல்லை.

பல யூதர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். உலக பணக்காரரான வாரன் பபாட் ஒரு யூதனிடம் தான் ஆரம்ப காலத்தில் வேலை செய்துள்ளார்.

6 comments:

priyamudanprabu said...

நான் ஏற்க்கனவே படித்துள்ளேன்
அருமையான புத்தகம்.
உலக அரசியலில் இஸ்ரேல் உருவானது மிகமுக்கியமான இடம்.
பா.ராகவனின் புத்தகங்கள் எப்பவுமே சிறப்பாக இருக்கும்
கிஸ்புல்லா என்ற ஒரு புத்தகம் உள்ளது முடிந்தால் படித்து பாருங்கள்


///
(மறைமுகக் காரணம் அமெரிக்காவின் துருப்புகளுக்கு அரேபிய நிலத்தில் இடம் வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு)

////

ஆம் ,
பிடல் கெஸ்ரோ வரலாறு படித்தேன்(கே.சார்லஸ்)
அமெரிக்காவின் கோர முகங்கள் தெரிகின்றது
அமெரிக்க வரலாறு என்று ஒரு வீடியோ படாம் தமிழில் கிடைத்தது,அதில் அமேரிக்கா எப்படி உருவானது(செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு) என்று அறியலாம்

Unknown said...

பா. ராகவனின் தீவிரவாதிகளைப் பற்றிய ஆறாண்டுகால ஆராய்ச்சி புத்தகங்களை இரு மாதங்களுக்கு முன்புதான் வாங்கினேன். முழுவதுமாக மாயவலை என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். டாலர் தேசம் வாங்கி ஒரு வருடம் ஆகிறது. இன்னும் படிக்கவில்லை.படிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா பா. ராகவன் அருமையான நாவலாசிரியர்.

http://online-tamil-books.blogspot.com/2009/01/alagilaa-vilayaattu-by-pa-ragavan.html

அவரை விரும்பி படிக்க ஆரம்பித்தது இந்த நாவலைப் படித்ததில் இருந்துதான்.

நட்புடன் ஜமால் said...

இது நல்ல புத்தகம்

மிகவும் விரும்பி படித்தேன் ...

Unknown said...

பின்னூட்டத்திற்கும், நட்பு வட்டத்திற்குள் வந்ததர்க்கும் நன்றி ஜமால்...

நிங்கள் சொல்வது சரிதான். சோர்வில்லாமல் படிக்கும் படி எழுதியிருப்பார்.

J S Gnanasekar said...

2009லேயே படித்துவிட்டீர்களா!!!!

இந்த பிப்ரவரியில் தான் முதலில் படித்தேன். நேற்றுதான் இரண்டாம் முறை படிக்க ஆரம்பித்தேன். ஏழு வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு புத்தகத்தை இரண்டாம் முறை படிப்பது இப்போதுதான். புத்தகம் தளத்தில் விரைவில் இன்னும் பேசுவோம்.

J S Gnanasekar said...

Some errors. Just correct them. No need to publish this comment.

//அமைதிக்கான பரிசு வாங்கியவர்கள் இறந்துவிடார்கள்// - சைமன் பெரஸ் ஜனாதிபதியாக இருக்கிறார்.

//இஸ்ரேல் பிரிந்து சென்ற ஓராண்டுக்குள் அருகிலுள்ள நாடுகளை ஆக்ரமித்துள்ளது// - 1956 வரை இஸ்ரேல் தானாக சண்டையை ஆரம்பித்ததில்லை.


//இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேம்// - But not recognized internationally.