Thursday, April 9, 2009

Prachanai Poomigal - S.G.S

வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளராக விளங்கும் ஜி.எஸ்.எஸ் கதை, நாவல், கட்டுரை என பல்வேறு தளத்தில் செயல்படுபவர். மேலும் இவர் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்.

இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த "பிரச்சனை பூமிகள்" வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடரை தவறவிட்டவர்கள் படித்து மகிழ இப்பொழுது புத்தகமாகக் கிடைக்கிறது. இப்புத்தகம் மின்நூலாக www.vikatan.com-ல் கிடைக்கிறது.

பிரச்சனை பூமிகள்: ஜி.எஸ்.எஸ் (Rs. 90)
வெளியீடு: ஆனந்த விகடன்

நாம் பூமியில் வாழ்கிறோம். ஆனால் பிரச்சனைகளுக்கு நடுவில் தான் வாழ்கிறோம். மழைக்காலத்தில் நாம் வீட்டைச் சுற்றித் தேங்கும் தண்ணீர் பிரச்சனை, கோடை காலத்தில் குடி தண்ணீர் பிரச்சனை & மின்வெட்டுப் பிரச்சனை. மேலும் வீட்டுக்கு அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் குடி மகன்களால் பிரச்சனை. ஆக முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இது போன்ற சில பிரச்சனைகள் இருக்கிறது.

இவையெல்லாம் நாளேடுகளில் நாம் அன்றாடும் படிக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகள். சிறிது முயற்சி எடுத்தால் நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் விலை வாசிப்பிரச்சனை ஆண்டி முதல் அமைச்சர் வரை அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இதன் முக்கியக் காரணம் உலக நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகள் தான். அது போன்ற பிரச்சனைகலுள்ள நாடுகளின் பட்டியல் கீழே

1). ஷாங்காய் 2). இந்தோனேசியா 3). போஸ்னியா
4). எத்தியோபியா 5). ஆப்கானிஸ்தான் 6). இஸ்ரேல்
7). வாடிகன் 8). பாகிஸ்தான் 9). தைவான் 10). இராக்
11). பிலிப்பைன்ஸ் 12). பங்களாதேஷ் 13). வட அயர்லாந்து
14). கம்போடியா 15). கியுபா 16). அல்பேனியா 17). மியான்மர்
18). ஜயர் 19). ஜப்பான் 20). செஷன் 21). வட கொரியா
22). தென் கொரியா 23). திபெத்

ஜப்பான், திபெத் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளின் பிரச்சனைகளும் அவற்றின் தாக்கங்களும் உலகமறிந்ததே. மற்ற நாடுகளைப் பற்றிய அடிப்படை பிரச்சனைகளை நாம் துணுக்குச் செய்தியாகப் படிப்பதோடு சரி. அவற்றைப் பற்றிய ஆழ்ந்த வாசிப்புக்கு ஆசிரியர் "ஜி.எஸ்.எஸ்" நம்மை அழைத்துச் செல்கிறார்.

ஜனவரி 2005 வரை நடந்த உலகின் மிக முக்கியப் பிரச்சனைகளை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். உலக அரங்கில் முக்கியம் வாய்ந்த நாடுகளின் சில முக்கிய இடங்களை பற்றிய தெளிவு இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் கிடைக்கிறது.

சில நாடுகள் பிரச்சனையைச் சமாளித்து பொருளாதார வல்லரசானாலும், சில நாடுகள் தான் கண்ட ஆட்சியாளர்களால் சீர்கெட்டு எப்படித் தவிக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆக உலக சரித்திரம் உள்ளங்கையில் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

Note: இணைய நண்பர் கலையகம் இது போன்ற உலக அரசியலை தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவது வரவேற்கப்பட வேண்டியது. அவரது வார்த்தைகளில் சொல்லுவதென்றால் "வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடித் தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே" அவரது நோக்கமெனச் செயல்படுகிறார்.

3 comments:

வாசுகி said...

நீங்கள் அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் நன்றாக உள்ளது.
புதிய பல நூல்களை தெரிந்து கொண்டேன்.

"பிரச்சனை பூமிகள்" என்னிடமும் உள்ளது.
புத்தகத்தில் எல்லா நாடுகளின் பிரச்சினையும் இருக்கு இலங்கை தவிர.

நன்றி.

Unknown said...

நான் கூட அதைப்பற்றி யோசித்தேன் வாசுகி. ஆனால் தமிழர்களுக்கு இலங்கை பிரச்சனையைப் பற்றி நன்றாக தெரியும் என்று ஆசிரியர் தவிர்த்து இருக்கலாம். மேலும் இங்கு ஊடகங்களே அதைப்பற்றி நிறைய பேசுகிறதே.

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி வாசுகி.

Unknown said...

வணக்கம் திரு. கிருஷ்ணன் பிரபு

தமிழ் ஆங்கிலத்தில் நீங்கள் அறிந்த கியுபா குறித்த நல்ல புத்தங்கங்களின் தலைப்புகளை தயவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி

யுவராஜ்